பிளைட்ல இருந்து சி.எம் ஓவர்… ஓவர்… வெள்ளத்துல மக்களும் ஓவர்… ஓவர்- ம.பி அட்ராசிட்டி!

மத்தியப் பிரதேச மாநிலத்தில் 30 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த தொடர் மழையால் பல மாநிலங்கள் வெள்ளக் காடாகின. பல ஆயிரம் பேர் தங்கள் உடைமைகளை இழந்துள்ளனர். லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்கள் நீரில் மூழ்கின. வெள்ள நீர் சூழ்ந்து கொண்டதால் வீடுகளை விட்டு வெளியேறவும், அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமலும் தவித்து கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை விமானத்தில் சென்று முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் பார்வையிட்டார். உடனடியாக மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் விமானத்தில் இருந்து பார்வையிட்ட போது, கீழே நின்று கொண்டிருந்த மக்களிடம் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தொலைபேசியில் பேசுவது போல் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

34 பள்ளிகள்… ஒருத்தரு கூட பாஸ் ஆகல… மொத்தமா மூட அரசு திடீர் முடிவு!

அப்போது கீழே நின்றிருக்கும் நபரை பார்த்து முதல்வர் கையசைக்கிறார். நீங்கள் எல்லாம் எனக்கு தெரிகிறீர்கள். ஒன்றும் கவலைப்பட வேண்டாம் என்று ஆறுதல் கூறுகிறார். அப்போது விமானியிடம் நிறுத்து… கொஞ்சம் லெப்ட்… கொஞ்சம் ரைட்… என கட்டளைகள் பிறப்பிக்கிறார். இந்த வீடியோவை மத்தியப் பிரதேச மாநில காங்கிரஸ் கமிட்டி செய்தித்துறை துணைத் தலைவர் நரேந்திர சலுஜா தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதில், இந்த உலகில் ஏராளமான அதிசயங்களை பார்த்திருக்கிறேன். ஆனால் இப்படியொரு அதிசயத்தை பார்த்ததில்லை. வெள்ளத்தில் தவிக்கும் மக்கள் தங்களது வீட்டுக் கூரைகளின் மேல் நின்று கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு விமானத்தில் இருந்த படியே முதல்வர் கையசைக்கிறார். என்ன இதெல்லாம்? மீட்பு பணிகளை விரைவுபடுத்துங்கள் எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

இதற்கிடையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை விரைவாக வழங்க அதிகாரிகளுக்கு முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் உத்தரவிட்டுள்ளார். வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட மக்களை மீட்க தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படைகள் அனைத்து விதமான நடவடிக்கைகளிலும் இறங்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தேவை ஏற்பட்டால் ஹெலிகாப்டர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

அதேசமயம் நிவாரண முகாம்களில் போதிய வசதிகளை ஏற்படுத்துங்கள் என்று அறிவுறுத்தியுள்ளார். சேதமடைந்த பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் என உறுதி அளித்துள்ளார். வெள்ளம் வடிந்தவுடன் பாதிப்புகள் குறித்து விரிவான கணக்கெடுப்பு நடத்தப்படும். அதன்படி, வீடுகளை இழந்தவர்களுக்கு புதிதாக வீடுகள் கட்டித் தரப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.