மெரினாவில் பேனா நினைவு சின்னம்…! – அனுமதி அளிக்குமா மத்திய வல்லுநர் குழு..?

மறைந்த முன்னாள் முதல்வர்

பயன்படுத்திய பேனாவின் மாதிரி வடிவத்தை பிரமாண்ட சிலையாக சென்னை மெரினா கடலுக்கு நடுவே அமைக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டிருந்தது . இது மாநிலம் முழும் பேசு பொருள் ஆகி பல்வேறு தரப்பினர் இதற்கு ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் மத்திய வல்லுநர் குழு சென்னை மெரினாவில் பேனா வடிவ நினைவு சின்னம் அமைக்க ஆய்வு நடத்தி உள்ளது. சென்னை மெரினாவில் சுமார் 137 அடி உயரத்தில் பேனா நினைவு சின்னம் அமைப்பது மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சக வல்லுனர் குழு ஆய்வு செய்தது. இதனால் ஏற்ப்படும் பாதிப்புகள் குறித்தும் ஆய்வுகள் செய்யப்படவுள்ளது.

இந்த பேனா வடிவிலான நினைவிடம் ரூ.39 கோடியில் அமைக்கும் திட்டத்துக்கு, கடலோர ஒழுங்குமுறை மண்டல ஒப்புதல் கோரப்பட்டது. மாவட்ட அளவிலான இந்த ஆணையம், இதற்கு சில நிபந்தனைகள் விதித்து, மாநில ஆணையத்துக்கு அனுப்பியது. மாநில ஆணையத்தில் ஜனவரியில் இதற்க்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.

மறைந்த முதலவர் கருணாநிதி நினைவிடம் அமைந்திருக்கும் இடத்தில் இருந்து, 650 மீட்டர் தொலைவில், 137 அடி உயரத்துக்கு கடலில் பேனா நினைவு சின்னம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்தது. இதற்கு மாநில கடலோர ஒழுங்குமுறை ஆணையத்திடம், பொதுப்பணித் துறை விண்ணப்பித்தது.கடலில் கட்டுமானங்கள் மேற்கொள்ள, மாநில அளவில் அனுமதி வழங்க முடியாது. எனவே, இந்த விண்ணப்பத்தை சில நிபந்தனைகள் அடிப்படையில், மத்திய கடலோர ஒழுங்குமுறை மண்டல மேலாண்மை ஆணையத்துக்கு அனுப்ப, மாநில ஆணையம் பரிந்துரைத்தது.

இத்திட்டத்திற்கு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வு, சுற்றுச்சூழல் மேலாண்மை திட்டம், சூழலியல் அபாய மதிப்பீடு ஆய்வு, பேரிடர் மேலாண்மை திட்டம் மற்றும் அவசரகால செயல் திட்டம் தயாரித்து, தமிழக மாசு கட்டுப்பாடு வாரியம் வாயிலாக, பொது மக்களிடம் கருத்து கேட்பு கூட்டத்தை நடத்திய பின், மத்திய அரசிடம் விண்ணப்பிக்க உத்தரவிடப்பட்டது.இந்நிலையில், மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறையின், கடலோர ஒழுங்குமுறை மண்டல மேலாண்மை ஆணைய வல்லுனர்கள் அடங்கிய மதிப்பீட்டு குழு கூட்டம் இணையதளம் வாயிலாக நேற்று நடைபெற்றது.

இந்த இணைய வழி கூட்டத்தில் பேனா நினைவு சின்னம் அமைக்க அனுமதி கோரும் விண்ணப்பம் ஆய்வு செய்யப்பட்டது. இந்த குழுவின் ஆய்வின் பெயரில் இத்திட்டத்திற்கு அனுமதி வழங்கலாமா வேண்டாமா என்று குழு முடிவு எடுக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது…

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.