கழிவுநீர்த் தொட்டிக்குள் மரணிக்கும் மனிதர்கள்: இந்திய அளவில் தமிழகம் 2-வது இடம்

சென்னை: தமிழகத்தில் கடந்த 1993-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரை 218 பேர் கழிவுநீர்த் தொட்டியை சுத்தம் செய்யும்போது விபத்து ஏற்பட்டு மரணம் அடைந்ததாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மனிதக் கழிவுகளை அகற்றுவதற்கும், கழிவுநீர்த் தொட்டிகளை சுத்தம் செய்வதற்கும் மனிதர்களை பயன்படுத்தக் கூடாது என்று தொடர்ந்து கூறி வந்தாலும், நாடு முழுவதுமே ஏதோ ஒரு பகுதியில் இதுபோன்ற நிகழ்வுகள் நடந்துகொண்டே உள்ளன.

தமிழகத்தில் இவ்வாறு மரணம் ஏற்பட்டால் வழக்குப் பதிவு செய்து, இழப்பீடு வழங்கப்பட்டாலும், மறுபுறம் இதைத் தடுக்க கடுமையாக நடவடிக்கை எடுக்கபடாத காரணத்தால் இங்கு கடந்த 4 ஆண்டுகளில் 32 பேர் இதுபோன்ற விபத்துகளில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.

2019 ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரை கழிவுநீர்த் தொட்டி மற்றும் செப்டிக் டேங்கை சுத்தம் செய்யும்போது தமிழ்நாட்டில் 32 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்படி 2019-ம் ஆண்டு 13 பேரும், 2020-ம் ஆண்டு 9 பேரும், 2021-ம் ஆண்டு 5 பேரும், 2022-ம் ஆண்டு 5 பேரும் மரணம் அடைந்துள்ளனர்.

மேலும், கடந்த 1993-ம் ஆண்டு முதல் கடந்த 2022 ஜூன் மாதம் 30-ம் தேதி வரை நாடு முழுவதும் கழிவுநீர்த் தொட்டியை சுத்தம் செய்யும்போது 966 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதில், அதிபட்சமாக தமிழகத்தில் 218 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதில் 207 பேருக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு அடுத்தபடியாக குஜராத் மாநிலத்தில் 136 பேர், உத்தரப் பிரதேசத்தில் 105 பேர் மரணம் மரணம் அடைந்துள்ளனர் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.