தமிழகத்தில் லாட்டரி டிக்கெட் விற்பனை தடை செய்யப்பட்டுள்ள நிலையில், வாட்ஸ் அப் மூலம் ஆட்களை ஒருங்கிணைத்து சட்டவிரோதமாக விற்பனை செய்யும் கும்பல்களிடம் இருந்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க தமிழக காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் தடை செய்யப்பட்ட ஒரு நம்பர் லாட்டரி அசாம், கேரளா போன்ற மாநிலங்களில் விற்பனையாகிறது. அதனை ஆன்லைன் மூலம் வாங்கும் கும்பல், ஈரோடு, நாமக்கல், மதுரை, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் வாட்ஸ் ஆப் குழுக்கள் மூலம் கூலி தொழிலாளர்கள், கல்லூரி மாணவர்களை குறிவைத்து விற்பனை செய்வதாக கூறப்படுகிறது.
குறைந்த பட்ச தொகையாக ஒரு நம்பர் லாட்டரிக்கு 33 ரூபாய் வீதம் பணம் வசூலிக்கும் கும்பல், லாட்டரியில் சிறிய தொகையை வெற்றி பெறச் செய்து, பின்பு அதிக விலை கொடுத்து டிக்கெட் வாங்க வைத்து பண மோசடியில் ஈடுபடுவது தெரியவந்துள்ளது.