அதானி SEBI-யிடம் அனுமதி வாங்க வேண்டும்.. இதென்ன புது பிரச்சனை.. !

பெங்களூரு: அதானி குழுமம் இந்தியாவின் முன்னணி வணிக குழுமங்களில் ஒன்றாகும். சமீபத்திய காலமாகவே அதானி குழுமம் புது புது துறைகளில் காலடி எடுத்து வைத்து வருகின்றது. தனது முதலீடுகளை தொடர்ந்து பற்பல துறைகளில் வாரி இறைத்து வருகின்றது.

அப்படி தான் சில தினங்களுக்கு முன்பு NDTV-யின் கணிசமான பங்கினை வாங்கியிருப்பதாக அறிவிக்கப்பட்டது.

எனினும் வாங்கிய சில மணி நேரத்திலேயே கூடவே புது சர்ச்சையும் எழுந்தது. அது NDTV நிறுவனர்களிடமிருந்து ஒப்புதல் பெறவில்லை என்றும் அறிவிக்கபட்டது. NDTV -யின் RRPR ஹோல்டிங் நிறுவனத்திடம் NDTVயின் 29.18% பங்குகள் இருந்தது குறிப்பிடத்தக்கது.

எப்பவுமே இந்த பங்குகளுக்கு மவுசு தான்.. வாங்க ரெடியா இருங்க.. 3 பங்குகளை பட்டியலிடும் நிபுணர்கள்!

 விஸ்வபிரதான் கமர்ஷியல்

விஸ்வபிரதான் கமர்ஷியல்

RRPR ஹோல்டிங் நிறுவனத்திடம் இருந்த பங்குகளை, அதானி குழுமம் (விஸ்வபிரதான் கமர்ஷியல் பிரைவேட் லிமிடெட்) பெற, NDTV நிறுவனர்களிடமிருந்து எந்த ஒப்புதலும் பெறப்படவில்லை என்றும் பங்கு சந்தைக்கு அளிக்கப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 செபியிடம் ஒப்புதல் பெறணும்

செபியிடம் ஒப்புதல் பெறணும்

அதானியின் ஏஎம்ஜி மீடியா நெட்வொர்க் நிறுவனத்தின், துணை நிறுவனம் தான் விஸ்வபிரதான் கமர்ஷியல் பிரைவேட் லிமிடெட்.

இதற்கிடையில் தற்போது NDTV -யின் நிறுவனர்கள், விஸ்வபிரதான் கமர்ஷியல் பிரைவேட் லிமிடெட், ஏஎம்ஜி மீடியா நெட்வொர்க், அதானி எண்டர்பிரைசஸ் லிமிடெட் ஆகியவை, இந்திய பங்கு சந்தை மற்றும் பரிவர்த்தனை வாரியமான செபியிடம் ஒப்புதல் பெற வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

 

 முக்கிய நிறுவனர்கள் யார்?
 

முக்கிய நிறுவனர்கள் யார்?

இந்த பங்கு கையகப்படுத்தல் குறித்து அதன் முக்கிய நிறுவனர்களான ராதிகா ராய் மற்றும் பிரனாய் ராய், அதானி குழுமம் பங்குகளை வாங்கியது தொடர்பாக எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை என கூறியுள்ளனர். தற்போது இவர்களின் வசம் 32.26% பங்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

 இப்படி தான் சென்றது?

இப்படி தான் சென்றது?

அதானி குழுமத்தின் ஏஎம்ஜி மீடியா நெட்வொர்க் விஷ்வபிரதான் கமர்ஷியல் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தினை 113.74 கோடி ரூபாயாக்கு வங்கியுள்ளது. இதன் மூலம் விஷ்வபிரதான் கமர்ஷியல் பிரைவேட் லிமிடெட் வைத்திருந்த, 29.18% என்டிவிவி-யின் பங்குகள் அதானியின் வசம் சென்றுள்ளது.

 அதானியின் வசம் எப்படி?

அதானியின் வசம் எப்படி?

கடந்த 2009ம் ஆண்டில் பிரனாய் ராயின் RRPR நிறுவனம், விஷ்வபிரதான் நிறுவனத்திடம் இருந்து, 403 கோடி ரூபாய் கடன் வாங்கியிருந்தது. இந்த கடனை RRPR நிறுவனம் திரும்ப செலுத்தாத நிலையில், அது விஷ்வபிரதான் வசம் சென்றுவிட்டது. தற்போது விஷ்வபிரதானை அதானி வாங்கியுள்ள நிலையில், மொத்தமும் அதானி குழுமம் வசம் வந்து விட்டது. இப்படி தான் அதானி வசம் என் டி டி வி பங்குகள் வந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

New delhi television says Adani group needs SEBI’s approval for the deal

New delhi television says Adani group needs SEBI’s approval for the deal/அதானி SEBI-யிடம் அனுமதி வாங்க வேண்டும்.. இதென்ன புது பிரச்சனை.. !

Story first published: Thursday, August 25, 2022, 16:04 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.