ஐஐடி மாணவர்களுக்கு ஜாக்பாட்.. நிறுவனத்தில் சேரும் முன்பே 1 கோடி சம்பளம்..!

கொரோனா தொற்றுக் காலத்தில் உலகின் முன்னணி நிறுவனங்கள் புதிய ஊழியர்களை நியமிப்பதில் பெரிய அளவிலான தடுமாற்றத்தை எதிர் கொண்ட நிலையில், கடந்த ஆண்டு அதிகப்படியான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டது.

இதில் அதிகம் பலன் அடைந்தது ஐஐடி மாணவர்கள் தான், 2 வருடமாகப் பெரிய அளவில் செலவு செய்யாத நிறுவனங்கள், அதிகப்படியான டிமாண்ட் எனப் பல சூழ்நிலைகள் ஊழியர்களுக்குச் சாதகமாக அமைந்த நிலையில் அதிகப்படியான சம்பளத்தில் ஐஐடி மாணவர்கள் பணியில் நியமிக்கப்பட்டனர்.

ஆனால், இந்த ஆண்டுக் கூடுதல் சர்ப்ரைஸ் ஆக யாரும் எதிர்பார்க்காத அளவிலான நிறுவனங்கள் ஐஐடி மாணவர்களுக்கு அதிகளவிலான ப்ரீ ப்ளேஸ்மென்ட் ஆஃபர்கள் கொடுக்கப்பட்டு உள்ளது.

வெளிநாட்டில் ஐஐடி வளாகம் அமைக்க திட்டம் … எந்தெந்த நாடுகளாக இருக்கலாம்?

 ஐஐடி மாணவர்கள்

ஐஐடி மாணவர்கள்

ஐஐடி மாணவர்களுக்கான ப்ரீ ப்ளேஸ்மென்ட் ஆஃபர்களை வழங்கப்பட்டு உள்ளதைப் பார்க்கும் போது 2023ஆம் ஆண்டு ஐஐடி மாணவர்களுக்கான ப்ளேஸ்மென்ட் மிகவும் சிறப்பாக இருக்கும் எனக் கணிக்கப்படுகிறது. இது மட்டும் அல்லாமல் இந்த ஆண்டு வேலை வாங்குவோரின் சம்பளவும் தற்போது வெளியிடப்பட்டு உள்ளதால் ஐஐடி மாணவர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

 ஐஐடி கல்லூரி

ஐஐடி கல்லூரி

ஐஐடி டெல்லி, மெட்ராஸ், வாரனாசி, கவுகாத்தி, காந்திநகர் மற்றும் மண்டி ஆகிய கல்லூரிகளில் கடந்த ஆண்டை காட்டிலும் 15-75 சதவீதம் அதிக ப்ரீ ப்ளேஸ்மென்ட் ஆஃபர்கள் வந்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த ப்ரீ ப்ளேஸ்மென்ட் ஆஃபர்களுக்கு அதிகப்படியாக 91.2 லட்சம் முதல் 1.2 கோடி ரூபாய் அளவிலான சம்பளத்தைப் பெற்றுள்ளனர்.

 முக்கிய நிறுவனங்கள்
 

முக்கிய நிறுவனங்கள்

அமேசான், மைக்ரோசாப்ட், அடோபி, சேல்ஸ்போர்ஸ், டெக்சாஸ் இன்ஸ்ட்ரூமென்ட், குவால்கம், வால்மார்ட் Bain & Co மற்றும் Boston Consulting Group ஆகியவை ஏற்கனவே ப்ரீ ப்ளேஸ்மென்ட் ஆஃபர்களை வழங்கிய நிறுவனங்களில் அடங்கும்.

 ப்ரீ ப்ளேஸ்மென்ட் ஆஃபர்

ப்ரீ ப்ளேஸ்மென்ட் ஆஃபர்

இந்த ப்ரீ ப்ளேஸ்மென்ட் ஆஃபர்கள் எண்ணிக்கை செப்டம்பர் – அக்டோபர் காலகட்டத்தில் அதிகரிக்கும், மேலும் இறுதி ஆஃபர்கள் டிசம்பர் மாதத்தில் அளிக்கப்படும். மேலும் தற்போது கொடுக்கப்பட்டு உள்ள ப்ரீ ப்ளேஸ்மென்ட் ஆஃபர்கள் பெரும்பாலும் ஐடி சாப்ட்வேர், கோர் இன்ஜினியரிங், பைனான்ஸ், அனலிட்டிக்ஸ் மற்றும் டெக்னாலஜி ஆகிய துறையில் அளிக்கப்பட்டு உள்ளது.

 ஐஐடி மெட்ராஸ்

ஐஐடி மெட்ராஸ்

ஐஐடி மெட்ராஸ் கல்லூரியை பொருத்த வரையில் ப்ரீ ப்ளேஸ்மென்ட் ஆஃபர்கள் எண்ணிக்கை ஆகஸ்ட் 21 வரையில் 213 ஆக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு இதன் மொத்த எண்ணிக்கையே 160 தான். ஆக ஐஐடி மெட்ராஸ் கல்லூரியின் ப்ரீ ப்ளேஸ்மென்ட் ஆஃபர்கள் எண்ணிக்கை 33 சதவீதம் அதிகரித்துள்ளது.

 Intern வாய்ப்பு

Intern வாய்ப்பு

ப்ரீ ப்ளேஸ்மென்ட் ஆஃபர்கள் என்பது கேம்பஸ் தேர்வு அல்லது நேர்முகத் தேர்வின் போது அளிக்கப்படும் ஒரு வேலைவாய்ப்பு. இது நிரந்தர வேலைவாய்ப்புகள் இல்லை Intern வாய்ப்பு மட்டுமே, ஆனால் இந்த மாணவரின் வேலை திறன் நிறுவனத்திற்குப் பிடித்துவிட்டால் நிரந்தர வேலைவாய்ப்பு அளிக்கப்படும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

IIT students of 2023 batch gets more pre-placement offers than ever

IIT students of 2023 batch gets more pre-placement offers than ever ஐஐடி மாணவர்களுக்கு ஜாக்பாட்.. நிறுவனத்தில் சேரும் முன்பே 1 கோடி சம்பளம்..!

Story first published: Thursday, August 25, 2022, 17:25 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.