2022 இல் திட்டமிடப்பட்ட நிதிப்பற்றாக்குறையை 9.9 சதவீதத்திலிருந்து 2023 இல் 6.8 சதவீதமாக குறைப்பதை இலக்காகக் கொண்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இலங்கை இதுவரை காலமும் முகம் கொடுக்காத அளவு பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுத்துள்ளதாகவும் இதன் காரணமாக அத்தியாவசிய பொருட்கள் மற்றும் எரிபொருள் பற்றாக்குறை நாடெங்கிலும் இடம்பெற்றுள்ளது.
இதனால் 2022ல் 9.9 சதவீதமாக காணப்படும் நிதிப்பற்றாக்குறையை 2023ல் 6.8 சதவீதமாக குறைக்க இலங்கை திட்டமிட்டுள்ளது என அமைச்சரவை பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
2023-2025 ஆம் ஆண்டிற்கான நிதிக்கட்டமைப்பு மாற்றத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கி உள்ளத்துடன், தற்சமயம் நாடு வரலாற்றில் காணாத மிக மோசமான நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.
மேலும் கடன்களை உரிய முறையில் முகாமைத்துவம் செய்யவும், நாணத்தாள்களை அச்சிடுவதை குறைக்கவும் பணவீக்கத்தை குறைப்பதற்கு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5 சதவீதம் அதிகரிக்க வேண்டும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.