முதுமையை முடமாக்கும் பக்கவாதம் | முதுமை எனும் பூங்காற்று | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்

பக்கவாதம் முதுமையில் மக்களை அதிகமாக ஊனமாக்கும் ஒரு நோய். மூளைக்குச் செல்லும் இரத்தக் குழாயில் ரத்தம் உறைந்தாலோ அல்லது அந்த ரத்தக் குழாய்களிலிருந்து ரத்தம் கசிந்தாலோ பக்கவாதம் ஏற்படும். இந்தியாவில் அவசர சிகிச்சை பெறுபவர்களில் மாரடைப்பு, தலைக்காயத்திற்கு அடுத்ததாக மூன்றாவது இடத்தை பக்கவாதம் வகிக்கிறது.

காரணங்கள்

உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், இதயம் வலிமை இழத்தல், இதயம் சீராக இயங்காமல் விட்டு விட்டு துடிப்பது, உடற்பருமன் மற்றும் ஹார்மோன் சிகிச்சை பெறுதல் போன்ற தொல்லை உள்ளவர்களுக்கு பக்கவாதம் வர வாய்ப்புண்டு. புகை பிடித்தல், மற்றவரின் புகையை சுவாசித்தல் அளவுக்கு அதிகமாக மது அருந்துதல், ரத்தத்தில் அதிகக் கொழுப்புச் சத்து மற்றும் உடல் உழைப்பின்றி இருப்பவர்களுக்கும் பக்கவாதம் வருவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. சிறிய அளவில் பக்கவாதம் (mini stroke) வந்தவர்களுக்கு, மீண்டும் பெரிய அளவில் பக்கவாதம் வர வாய்ப்பு உள்ளது.

பத்மஸ்ரீ டாக்டர் வி.எஸ். நடராஜன்

அறிகுறிகள்

  • திடீரென்று முகம், கை, கால்கள் ஒரு பக்கம் வலிமை இழத்தல், மரத்துப்போதல் அல்லது செயலிழத்தல்.

  • கண் பார்வையில் திடீரென்று மாற்றம் ஏற்படுதல், பார்வை மங்குதல், இரட்டைப் பார்வை, கண் பார்வை செயலிழத்தல்.

  • திடீரென்று வாய் குளறுதல், மனக்குழப்பம், மற்றவர்களைப் புரிந்துகொள்ளாத நிலை. நடை தள்ளாடுதல், மயக்கம், எந்தக் காரணமும் இல்லாமல் தாங்க முடியாத தலைவலி, வாந்தி ஏற்படுதல்.

சிகிச்சை முறை

நீண்டகால முடக்க இயலாமைகளைத் தவிர்க்க பக்கவாதத்துக்கான சிகிச்சையை உடனடியாகத் தொடங்க வேண்டும். இதற்காக பக்கவாதத்தின் அறிகுறிகளை பாதிக்கப்படுபவர்கள் உடனடியாக அடையாளம் காண்பதும் அவசியம். மூளையில் ஏற்படும் இரத்தக் கட்டினால் 80 சதவீகித பக்கவாதமும், இரத்தக் குழாயில் ஏற்படும் இரத்தக் கசிவினால் 20 சதவிகிதம் பக்கவாதம் ஏற்படும்.

பக்கவாதம் வந்தவுடனே முதலில் ரத்த அழுத்தம், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு, ஈ.சி.ஜி. போன்ற அடிப்படை பரிசோதனைகளைச் செய்வார்கள். மிகவும் முக்கியமான பரிசோதனை, மூளை ஸ்கேன். இதன் மூலம் ஒருவருக்கு மூளையில் ரத்த

ஓட்டம் குறைந்து உள்ளதா? அல்லது ரத்தக்கசிவு ஏற்பட்டு உள்ளதா? என்று உறுதியாகக் கண்டறிய முடியும்.

சமீபகாலத்தில்உயரியசிகிச்சைமுறையினால்பக்கவாத்தினால்மூளையில்ஏற்படும்பாதிப்பைஅதிகஅளவில்குறைக்கப்பட்டு, பழையநிலைக்கேமீண்டுவரமுடியும். இதற்குவேண்டியதுஇரண்டு. ஒன்று – பக்கவாதத்தின்அறிகுறிகளைஉடனேதெரிந்துகொள்ளுதல். இரண்டுமிகவிரைவில்பக்கவாத்திற்கானசிகிச்சையைஆரம்பித்தல். பக்கவாதம்ஆரம்பித்த 4 5 மணிநேரத்திற்குள்ளேயே (பொன்னானநேரம் -Golden hours) சிகிச்சைபெற்றால்நல்லபலன்கிடைக்கும்.

தீவிர சிகிச்சை முறைகள்

இரத்தக் கட்டிகளை கரைத்தல் இரத்தக் குழாய்களில் இரத்தக் கட்டடினால் ஏற்பட்ட அடைப்பை ஊசி மூலம் மருந்தை செலுத்தி இரத்தக் கட்டியை கரைய வைத்து, தடைப்பட்ட இரத்த ஓட்டத்தை சீர்செய்து பழைய நிலைக்கே கொண்டு வரமுடியும். இச்சிகிச்சையை பக்கவாதம் ஆரம்பித்த 4 – 5 மணி நேரத்திற்குள்ளேயே தொடங்க வேண்டும்.

இரத்தக் கட்டியை அகற்றுதல் இரத்தக்கட்டி சற்று பெரிதாக இருந்தால் அவற்றை மருத்தின் மூலம் கரைக்க இயலாது. பாதிக்கப்பட்ட இரத்தக் குழாயில் சிறு குழாயை நுழைத்து இரத்தக் கட்டியை நீக்கிவிடுவார்கள்.

Representational Image

சிகிச்சை முறை

  • ரத்தம் உறைதலைத் தடுத்தல், உதாரணம்: ஆஸ்பிரின், க்ளோபிடோகிரள்

  • ரத்த அழுத்தத்தைக் குறைத்தல்

  • சிகரெட் பிடிப்பதை நிறுத்துதல்

  • கொழுப்பின் அளவைக் குறைத்தல்

  • ரத்தத்தில் சர்க்கரை அளவைக் குறைத்தல் மற்றம் சமச்சீர் உணவை உட்கொள்ளல்

நோயாளிக்கு இயன்முறை சிகிச்சையும் கொடுக்க வேண்டும். உரிய நேரத்திற்குள்ளேயே தக்க சிகிச்சை அளிக்காவிட்டால் பாதிக்கப்பட்ட பகுதி செயல் இழந்துவிடும். இத்துடன் பழையபடியே பேச அதற்குண்டான சிகிச்சையையும் (Speech therapy) கொடுக்க வேண்டும். தான் செய்து வரும் தொழிலை, மறுபடியும் செய்வதற்கு ஏதுவாக அதற்குண்டான சிறப்பு சிகிச்சையும் Occupational therapy) கொடுக்க வேண்டும்.

தடுக்கும் முறை

உங்களுக்கு நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம், மிகை கொழுப்பு அகியவை இருந்திருந்தால் அவைகளுக்கான மருந்துகளை உட்கொள்ளுங்கள். புகைப்பதையும், மது அருந்துவதையும் நிறுத்தவும். நல்ல வாழ்க்கை முறைகள், சமச்சீர் உணவு உட்கொள்ளுதல், வழக்கமான நடை, யோகா ஆகிய உடற்பயிற்சிகள், உங்களை ஆரோக்கியமாக வைத்து, பிற்கால அபாயங்களான இதய தாக்குதலையும், பக்கவாத நோய்களையும் நிச்சயம் தடுக்கும்.

எந்தளவுக்கு காலம் தாழ்த்தாமல் சிகிச்சை பெறுகிறீர்களோ அந்த அளவுக்கு நோயிலிருந்து விடுதலை கிடைக்கும். முதல் 3-4 மணி நேரங்கள் பொன்னான உயிர்காக்கும் நேரம். அந்த நேரத்தை வீணடித்து விடாதீர்கள். பக்கவாதம் தடுக்கக் கூடியது; ஏன் குணப்படுத்தக் கூடிய நோயும்கூட!

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.