இந்தியாவின் மிக காஸ்ட்லியான கார் எது தெரியுமா.. விலை எவ்வளவு?

கார்கள் என்றாலே பலருக்கும் விருப்பமான வாகனங்களில் ஒன்றாக உள்ளது. குறிப்பாக சொகுசு வசதிகளை கொண்ட மெர்சிடிஸ் பென்ஸ் கார் என்பது பலரின் கனவாகவே இருக்கும்.

ஜெர்மனியை சேர்ந்த சொகுசு கார் தயாரிப்பாளரான மெர்சிடிஸ் பென்ஸ் தனது விலையுயர்ந்த மின்சார வாகனத்தை (Mercedes-AMG EQS 53 4MATIC (sedan)) இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

இதன் விலை 2.45 கோடி ரூபாயில் தொடங்குகிறது (எக்ஸ் ஷோரூம் விலையில்).

என்னாது கார் எரிபொருளுக்கு மட்டும் இவ்வளவு செலவா.. புதுச்சேரி அமைச்சர்களின் செலவால் அதிர்ச்சி?

முதல் மின்சார கார்

முதல் மின்சார கார்

கடந்த 2020 அக்டோபரில் முழுமையாக இறக்குமதி செய்யப்பட்ட யூனிட்டாக 1.07 கோடி ரூபாயில் அதன் முதல் எலக்ட்ரிக் காரை அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் தான் இந்தியாவின் தனது எலக்ட்ரிக் மொபைலிட்டி வணிகத்தினை மெர்சிடிஸ் பென்ஸ் தொடங்கியது. தற்போது இந்த பட்டியலில் ஒரு விலை உயர்ந்த காரினை அறிமுகப்படுத்தியுள்ளது.

பேட்டரி திறன்

பேட்டரி திறன்

இந்த கார்கள் முழுவதும் கட்டமைக்கப்பட்ட யூனிட்டாக இறக்குமதி செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது பல புதிய அம்சங்களுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக 107.8kWh திறனுடம் பேட்டரி திறனுடனும் இருக்கும் என அறிவிக்கப்பட்டது. இது தவிர இன்னும் ஏராளமான தொழில் நுட்ப வசதிகளுடன் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

அடுத்த 3- 4 மாதங்களில் புதிய கார்கள்
 

அடுத்த 3- 4 மாதங்களில் புதிய கார்கள்

ஏராளமான பல அம்சங்களுடன் வெளியாகியுள்ள இந்த கார், நிச்சயம் கார் பயனர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் அடுத்த மூன்று நான்கு மாதங்களில் இதன் பயணத்தை இன்னும் வேகப்படுத்தலாம் என்றும் பென்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இன்னும் மூன்று மின்சார கார்களை விரைவில் அறிமுகப்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளது.

புதுவரவுகள்

புதுவரவுகள்

அதே போல உள்நாட்டில் அசெம்பிள் செய்யப்படும் மின்சார செடான் EQC 580 ஐ அடுத்த மாதம் அறிமுகப்படுத்தும் என்று தெரிவித்துள்ளது. அதனை தொடர்ந்து ஏழு இருக்கைகள் கொண்ட மின்சார SUV, EQB, நவம்பர் மாதத்தில் வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தத்தில் இன்னும் புது வரவுகள் அடுத்தடுத்த மாதங்களில் சந்தையை ஆக்கிரமிப்பு செய்யவுள்ளன.

அசெம்பிளிங்-க்கு முக்கியத்துவம்

அசெம்பிளிங்-க்கு முக்கியத்துவம்

அதிகளவிலான இறக்குமதி வரியினை குறைக்க, உள்நாட்டில் அசெம்பிளிங் செய்யவுள்ளதாகவும், இதன் வளர்ச்சி 200% அதிகமாக இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது மேட் இன் இந்தியா திட்டத்தில் உருவாக்கப்படும் என தெரிகிறது.

இது குறித்தி மெர்சிண்டிஸ் பென்ஸ்-ன் நிர்வாக இயக்குனரும், தலைமை நிர்வாக அதிகாரி, நாங்கள் மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறோம். அடுத்த 5 ஆண்டுகளில் விற்பனையில் 25% வளர்ச்சி காணலாம் என நாங்கள் எதிர்பார்க்கிறோம் என தெரிவித்துள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Rs.2.45 crore! This is most expensive EV car in india

Rs.2.45 crore! This is most expensive EV car in india/இந்தியாவின் மிக காஸ்ட்லியான கார் எது தெரியுமா.. விலை எவ்வளவு?

Story first published: Thursday, August 25, 2022, 19:37 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.