தூத்துக்குடி – திருநெல்வேலி ரயில் நாரைக்கிணறில் நின்று செல்லும் – தெற்கு ரயில்வே அறிவிப்பு

பயணிகளின் வசதிக்காக தூத்துக்குடி – திருநெல்வேலி ரயில் நாரைக்கிணறு ரயில் நிறுத்தத்தில் நின்று செல்லும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
கொரோனா தொற்றுக்கு பிறகு மதுரை கோட்டத்தில் பல்வேறு ரயில் நிலையங்களில் ரயில்கள் நின்று செல்லும் வசதி அளிக்கப்படாமல் இருந்துவந்த நிலையில், படிப்படியாக பயணிகளின் வசதிக்காக பல்வேறு ரயில் நிலையங்களில் ரயில்கள் நின்று செல்ல ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
image
அந்த வகையில் தூத்துக்குடி – திருநெல்வேலி – தூத்துக்குடி முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில்களுக்கு வாஞ்சி, மணியாச்சி அருகே உள்ள நாரைக்கிணறு ரயில் நிலையத்திற்கு நிறுத்தம் வழங்கப்படமால் இருந்து வந்தது. இந்நிலையில் பயணிகளின் வசதிக்காக செப்டம்பர் 1ம் தேதி முதல் நாரைக்கிணறு ரயில் நிலையத்தில் தூத்துக்குடி – திருநெல்வேலி – தூத்துக்குடி முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில்கள் நின்று செல்லும் என மதுரைக்கோட்டம் தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
image
அதன்படி தூத்துக்குடி – திருநெல்வேலி சிறப்பு ரயில் மற்றும் திருநெல்வேலி – தூத்துக்குடி சிறப்பு ரயில் ஆகியவை நாரைக்கிணறு ரயில் நிலையத்தில் இருந்து முறையே இரவு 07.15 மணிக்கும், காலை 08.00 மணிக்கும் புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.