பின்லாந்து நாட்டின் பிரதமராக கடந்த 2019ல் பதவியேற்ற 34 வயதான சன்னா மரின் மிகவும் இளம் வயது பெண் பிரதமராக அறியப்படுகிறார். சில தினங்களுக்கு முன்பாக சன்னா மரின் மது அருந்திவிட்டு தனது வீட்டில் நண்பர்களோடு நடனம் ஆடிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் சன்னா மரீன் போதைப்பொருள் உட்கொண்டிருப்பதாகவும், நாட்டுக்கு தவறான முன் உதாரணம் ஆகிவிட்டதாகவும் எதிர்கட்சிகள் குற்றம் சாட்டின. ஆனால் அதை மறுத்த சன்னா மரின் தனது வீட்டில் தான் மது அருந்தியதும், நடனம் ஆடியதும் தனது தனிப்பட்ட வாழ்க்கை என்றும், ஆனால் எப்போதும் எங்கும் தான் போதை பொருள் பயன்படுத்தியதில்லை என்றும் விளக்கம் அளித்துள்ளார் . மேலும் போதைப்பொருள் பரிசோதனைக்கும் தாமாகவே முன்வந்து சோதனைக்கு உட்படுதிக்கொண்டார்.
இந்த சோதனையில் அவருடைய சிறுநீர் மாதிரிகள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்ததில் அவர் போதை பொருட்கள் எதுவும் எடுத்துக் கொள்ளவில்லை என முடிவுகள் வெளியாகியுள்ளது. இதனால் பின்லாந்தில் அவரது பிரதமர் பதவி தப்பியுள்ளது. இதனைத்தொடர்ந்து பின்லாந்த் சன்னா மரின் ஆபாச புகைப்பட சர்ச்சையிலும் சிக்கியிருக்கிறார். அவரது வீட்டில் சன்னாவின் தோழிகள் இரண்டு பேர் மேலாடைகளை கழற்ற்றிய நிலையில், முத்தம் கொடுத்து கொண்டிருக்கும் புகைப்படம் ஒன்று வெளியானது. அந்த புகைப்படத்தில் சன்னா மரின் இல்லை என்றாலும் அதற்கு சன்னா மரின் மன்னிப்பு கோரியுள்ளார்.
ஏற்கனவே சன்னா வெளியிட்ட தனது கவர்ச்சி புகைப்படங்களையும் பலர் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். இது அவர் தனிப்பட்ட வாழக்கை என்றாலும் பொதுவாழ்வில் இருப்பவர்கள் பொதுவெளியில் நாகரிகத்தை கடை பிடிக்க வேண்டும் என சிலர் தங்கள் கருத்தை கூறி வருகின்றனர். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.