பங்கு சந்தை முதலீட்டில் இன்றும் நீண்டகால முதலீடுகள் தான் மிக லாபகரமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. அப்படி நீண்டகால நோக்கில் லாபம் கொடுத்த இரண்டு மல்டி பேக்கர் பங்குகளை பற்றித் தான் இந்த பதிவில் பார்க்க இருக்கிறோம்.
பங்கு சந்தையில் முதலீடு செய்பவராக இருந்தால் உங்களுக்கு நிச்சயம் பங்கு பிரித்தல் (Stock Splits) பற்றி அறிந்திருக்கலாம்.
செபியின் விதிமுறை படி, ஒரு நிறுவன பங்கின் விலையானது ஆறு மாத காலமாக ஒரு பங்கு 500-க்கு மேலாக விற்பனை செய்யப்பட்டால், அதனை பங்கு பிரித்தல் என்று கூறுவார்கள்.
NDTV நிறுவனர்களிடம் அனுமதி வாங்காமல் பங்கு விற்பனை.. அதானி குழுமத்திற்கு பிரச்சனை..!
சிறு முதலீட்டாளர்களை கவர திட்டம்
இப்பங்குகளின் மதிப்பினை பிரிக்கும்போது பங்குகளின் எண்ணிக்கை அதிகரிக்கும், மதிப்பீடும் மாறும். ஆனால் மொத்த மதிப்பீடு என்பது மாறாது.. எனினும் பங்கு சந்தையில் குறைந்த விலை பங்குகளானது, முதலீட்டளர்களை கவரலாம் என இதுபோன்று பங்குகள் பிரிக்கப்படுவதுண்டு. அப்படி செப்டம்பரில் இரு மல்டிபேக்கர் பங்குகள் பிரிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
என்னென்ன பங்குகள்?
ஒன்று ரித்தேஷ் ப்ராப்பர்டீஸ் அண்ட் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் மற்றும் சவிதா ஆயில் டெக்னாலஜிஸ் லிமிடெட். இந்த நிறுவனங்களின் பங்குகள் தான் செப்டம்பரில் பிரிக்கப்படலாம் என பிரிக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான ரெக்கார்டு தேதி செப்டம்பர் 2, 2022 மற்றும் செப்டம்பர் 3, 2022 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சவிதா ஆயில் டெக்னாலஜிஸ் லிமிடெட்
கடந்த ஜூன் 21 அன்று சவிதா ஆயில் டெக்னாலஜிஸ் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குனர் குழு உறுப்பினர்கள், இப்பங்கினை பிரிக்க பரிந்துரை செய்தனர். இதன் முகமதிப்பு ஒரு பங்குக்கு 2 ரூபாயாகும்.
இந்த நிறுவனம் சமீபத்தில் பங்கு சந்தைக்கு தாக்கல் செய்த அறிக்கையில் செப்டம்பர் 2, 2022ல் வருடாந்திர கூட்டத்தினை நடத்த உள்ளதாக அறிவித்துள்ளது. ஆக தகுதியான பங்குதாரர்களுக்கு இந்த பங்கு பிரித்தல் சலுகையும் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரித்தேஷ் ப்ராப்பர்டீஸ் அண்ட் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்
ரித்தேஷ் ப்ராப்பர்டீஸ் அண்ட் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனம் பங்கு சந்தைக்கு தாக்கல் செய்த அறிக்கையில் செப்டம்பர் 3, 2022 அன்று ரெக்கார்டு தேதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகுதி வாய்ந்த பயனாளர்களுக்கு இந்த சலுகையானது கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரித்தேஷ் ப்ராபர்டீஸ் – மல்டிபேக்கர் பங்கு?
ரித்தேஷ் ப்ராபர்டீஸ் பங்கின் விலையானது ஜூலை 14, 1995 அன்று 11 ரூபாயாக இருந்தது. இதன் ஆல் டைம் உச்ச விலையில் 4311.82% ஏற்றம் கண்டுள்ளது. இதே கடந்த 5 வருடத்தில் 7015.84% ஏற்றம் கண்டுள்ளது. இதே கடந்த 3 ஆண்டுகளில் 3468.38% ஏற்றம் கண்டுள்ளது/. கடந்த ஆண்டில் 149.19% ஏற்றம் கண்டும், நடப்பு ஆண்டில் இது வரையில் 13.27% ஏற்றம் கண்டும் காணப்படுகின்றது.
சவிதா ஆயில் டெக்னாலஜிஸ் – மல்டிபேக்கர்
சவிதா ஆயில் டெக்னாலஜிஸ் லிமிடெட் பங்கு விலையானது, ஜனவரி 1, 1999ல் 17.55 ரூபாயாக இருந்தது. இதன் ஆல்டைம் உச்சத்தில் இருந்து 9119.37% ஏற்றத்தில் காணப்படுகிறது. இது கடந்த 5 ஆண்டுகளில் 42.04% ஏற்றத்தில், 1 வருடத்தில் 3.27% ஏற்றத்திலும் உள்ளது, இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 42.74% ஏற்றம் கண்டுள்ளது.
இன்றைய நிலவரம் என்ன?
ரித்தேஷ் ப்ராபர்டீஸ் பங்கின் விலையானது இன்று 10% சரிவினைக் கண்டு, 485.30 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இதே சவிதா ஆயில் டெக்னாலஜிஸ் லிமிடெட் பங்கு விலையானது 2.78% குறைந்து, 1620.25 ரூபாயாகவும் முடிவடைந்துள்ளது.
This 2 multibagger shares to watch in the 1st week of September for stock splits
This 2 multibagger shares to watch in the 1st week of September for stock splits/இந்த 2 மல்டிபேக்கர் பங்குகளும் உங்களிடம் இருக்கா.. செப்டம்பர் வரை வைத்திருங்க.. சர்பிரைஸ் உண்டு