லக்னோ: எதிர்வரும் 31-ம் தேதி நாடு முழுவதுமாக ஹிந்துக்களால் விநாயகர் சதுர்த்தி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட இருக்கும் நிலையில் உத்திரபிரதேசத்தில் தங்கத்திலான விநாயகர் சிலை தயாரிக்கப்பட்டு வருகிறது. சந்தாயூசி என்ற இடத்தில் இந்த தங்கத்திலான விநாயகர் சிலை தயாரிக்கப்பட்டு வருகிறது.
இந்த சிலைக்கு ஸ்வர்ண கணேஷ் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. சிலையில் 40 முதல் 50 சதவிகிதம் வரை தங்கம் பயன்படுத்தப்படும் என்றும் அத்துடன் பிற உலோகங்கள் பயன்படுத்தி இந்த விநாயகர் சிலை செய்யப்பட்டு வருவதாக சிலை தயாரிப்பு கலைஞர்கள் கூறுகின்றனர். சுமார் 18 அடி உயரத்தில் தயாரிக்கப்பட்டு வரும் தங்க விநாயகர் சிலையை பாதுகாப்பாக கரைக்கவும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் யோசித்து வருகின்றனர்.
இதனிடையே மும்பையிலும் இந்த முறை விநாயகர் சதுர்த்தி விழா கோலகலமாக கொண்டாடப்பட இருக்கிறது. அதற்காக வித விதமான வடிவங்களில் விநாயகர் சிலைகள் செய்யப்பட்டு வருகின்றன. கொரோனா காலமாக இரண்டு ஆண்டுகள் கழித்து இந்த ஆண்டு எந்த வித கட்டுப்பாடுகள் இன்றி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட இருக்கிறது.
இதனால் சிலைகள் அதிக அளவில் தயாரிக்கப்பட்டு வருகின்றன. அதே நேரம் பிளாஸ்டர் ஆப் பாரிஸ் என்றும் மூலப்பொருட்கள் விலை உயர்வால் சிலைகளும் விலையும் அதிகமாக இருக்கும் என்று சிலை உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.