பிக்பாஸ் சீசன் 6 விரைவில் தொடங்க உள்ள நிலையில், இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று ப்ரமோ மூலம் விஜய் டிவி அறிவித்துள்ளது.
ரசிகர்களின் ரசனைக்கேற்ப ரியாலிட்டி ஷோக்கள் ஒளிபரப்புவதில் முன்னணியில் உள்ள விஜய் டிவியில் கடந்த 2017-ம் ஆண்டு முதல் பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்நிகழ்ச்சி இதுவரை 5 சீசன்கள் முடிந்துள்ள நிலையில், 6-வது சீசன் விரைவில் தொடங்க உள்ளது.
எவ்வித தொடர்பும் இல்லாமல் சக போட்டியாளர்களுடன் ஒரே வீட்டில் இருந்து 100 நாட்களை கழிக்க வேண்டும். இடையில் பிக்பாஸ் சொல்லும் டாஸ்க்குகளையும், ரசிகர்கள் வழக்கும் மதிப்பெண்களையும் வைத்து போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்படுவர்கள் இதுவே பிக்பாஸ் நிகழ்ச்சியின் விதி.
பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சம் இல்லாத இந்த நிகழ்ச்சியில் முதல் 3 சீசன்கள் பெரும்பாலும் திரைத்துறை மற்றும் சின்னத்திலையில் பிரபலமானவர்களை போட்டியாளர்களை தேர்வு செய்து நடத்தி வந்ததனர். அடுத்து 4 வது சீசனில் மக்கள் மத்தியில் பிரபலமில்லாத சிலரை போட்டியாளர்களை தேர்வு செய்த நிலையில், 5-வது சீசனில் ஒரு சில பிரபலங்களை தவிர மற்ற அனைவரும் புதுமுகங்களாக தேர்வு செய்யப்பட்டனர்.
இதனிடையே விரைவில் தொடங்க இருக்கும் 6-வது சீசனில் புதிய முயற்சியாக சாதாரண மக்களும் பிக்பாஸ் நிகழ்ச்சியில பங்கேற்க வசதியாக விஜய் டிவி ப்ரமோ ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த ப்ரமோவில் ஒரு டீக்கடை நடத்துபவர் தனது கஸ்டமரிடம் தான் பிக்பாஸ் வீட்டுக்கு செல்வதாக கூறுகிறார்.
இதை கேட்டு அவர்கள் சிரிக்க, உடனே என்ட்ரி ஆகும் பிக்பாஸ் 5வது சீசனின் வெற்றியாளர் ராஜூ ஜெயமோகன், நீங்களும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கலாம அதற்கு நீங்கள் பிரபலமாக இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை என்று சொல்கிறார். இந்த ப்ரமோ தற்போது வைரலாகி வருகிறது.
மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்க விரும்புபவர்கள் Vijay.star.com ல் லாகின் செய்து பிக்பாஸில் கலந்துகொள்வதற்காக காரணத்தை வீடியோவாக பதிவு செய்து அப்லோடு செய்ய வேண்டும் என்றும் வீடியோவில் குறிப்பிடப்பட்டள்ளது. இதன் மூலம் பிரபலங்கள் மட்டுமல்லாது சதாரண மக்களும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”