WFH குறித்து பிரதமர் மோடி என்ன கூறியிருக்கிறார் பாருங்க.. ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்

பிரதமர் நரேந்திர மோடி தொழிலாளர்கள் மாநாட்டில், வீட்டில் இருந்து பணி புரியும் சூழல் மற்றும் பெண்களுக்கு பணியாற்ற உகந்த நேரம் ஆகியவற்றை உள்ளடக்கிய தொலை நோக்கு பார்வையை உருவாக்க மத்திய தொழிலாளர் அமைச்சகம் செயல்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தால், ஆகஸ்ட் 25 – 26 தேதிகளில் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இரண்டு நாள் தொழிலாளர் உச்சி மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த மாநாட்டில் வீடியோ கான்ப்ரன்சிங் வாயிலாக பிரதமர் மோடி உரையாற்றினார்.

Cyber Attack: வெறும் 3 மாதத்தில் 18 மில்லியன் சைபர் தாக்குதல்கள்..!

 பல சீர்திருத்தங்கள்

பல சீர்திருத்தங்கள்

கடந்த 8 ஆண்டுகளில் நாங்கள் பல தொழிலாளர் சீர்திருத்தங்களைக் கொண்டு வந்துள்ளோம். இதன் மூலம் தொழிலாளர்களுக்கு அடிப்படை சம்பளம், சுகாதார காப்பீடு மற்றும் பிற சலுகைகளை உறுதிப்படுத்தியுள்ளோம். அவசர கடன் உத்தரவாத திட்டத்தால் கொரோனா காலத்தில் 1.5 கோடி பேர் பாதுகாக்கப்பட்டுள்ளனர்.

தொலை நோக்கு திட்டம்

தொலை நோக்கு திட்டம்

தற்போது 2047ம் ஆண்டுக்கான தொலை நோக்கு திட்டத்தை தொழிலாளர் அமைச்சகம் உருவாக்கி வருகிறது. இதில் வீட்டில் இருந்து பணி, பணி இடம், பணி நேரம், பெண்களுக்கான உகந்த பணிச் சூழல் உள்ளிட்டவை அடங்கும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

உண்மையில் இதுபோன்ற விஷயங்கள் செயல்படுத்தபடுமாயின் அது ஊழியர்களின் நலனில் முக்கிய பங்கு வகிக்கும். குறிப்பாக பெண் பணியாளார்களின் நலன் பாதுகாப்படும். பலரும் இதனால் பலனடைய முடியும். இதன் மூலம் பொருளாதாரமும் மேன்மையடையும்.

 

தொழிலாளர் நலச்சட்டம்
 

தொழிலாளர் நலச்சட்டம்

சமீபத்திய ஆண்டுகளாக மத்திய அரசின் 4 புதிய தொழிலாளர் சட்டங்கள் நடைமுறைக்கு வரலாம் என்ற பெருத்த எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது. வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை செய்ய வேண்டியிருக்கும். அதாவது தினசரி 12 மணி நேரம் வேலை செய்ய வேண்டியிருக்கும். இதன் மூலம் ஊழியர்கள் வாரத்தில் 48 மணி நேரம் வேலை செய்ய வேண்டியிருக்கும் என்ற திட்டம் செயல்படுத்தப்படுமா?

சம்பள மசோதா

சம்பள மசோதா

புதிய சம்பள மசோதா (New Wage Code Bill) மூலமாக வருங்கால வைப்பு நிதி, கிராஜ்விட்டி, அகவிலைப்படி, டிராவல் அலவன்ஸ் மற்றும் வீட்டு வாடகை கொடுப்பனவு என அனைத்திலும் மாற்றம் ஏற்படலாம் என்ற எதிர்பார்ப்பு நீண்டகாலமாக எதிர்பார்ப்பு இருந்து வருகின்றது . புதிய தொழிலாளர் சட்டத்தின் மூலமாக வருங்கால வைப்பு நிதி, கிராஜ்விட்டி, அகவிலைப்படி, பயணப் படி மற்றும் ஹவுஸ் ரெண்ட் அலவன்ஸ் என அனைத்தும் 50%க்கு மேல் இருக்காது என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்தும் அரசு ஆலோசனை செய்து வருகின்றதா? இது எப்போது முதல் அமலுக்கு வரும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

மொத்தத்தில் வீட்டில் இருந்து பணி, பணிபுரியும் சூழல், பெண்க்ளுக்கு ஏதுவான பணிச்சூழல் என்பதை அரசே ஆலோசித்து வருவது நல்ல விஷயமாகவும் பார்க்கப்படுகிறது.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

WFH, Flexible work hours, particularly for women: what said Narendra modi about it

WFH, Flexible work hours, particularly for women: what said Narendra modi about it/WFH குறித்து பிரதமர் மோடி என்ன கூறியிருக்கிறார் பாருங்க.. ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்

Story first published: Thursday, August 25, 2022, 21:50 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.