‘மகளிர் நிறைகாக்கும் காப்பே தலை’ என்ற வள்ளுவரின் குறளுக்கேற்ப, பெண்கள் தங்களின் சொந்த உழைப்பால் முன்னேறுவதே அவர்களின் சமூக, பொருளாதார மாற்றங்களை ஏற்படுத்தும். அந்த வகையில், சேலத்தில் அமைந்துள்ள சாரதி எஃகோ பேக்ஸ் என்ற நிறுவனத்தின் மூலம் பெண்கள் தங்களை பொருளாதாரத்தில் முன்னேற்றிக்கொள்ள சுயதிறன் வேலை வாய்ப்புகளை அளித்து வருகின்றனர்.
சேலத்தை சேர்ந்த தொழிலதிபர், அரசியவாதி ஆர். பார்த்தசாரதி என்பவர் நடத்திவரும் சாரதி எஃகோ பேக்ஸ் என்ற நிறுவனத்தின் மூலம், பெண்களுக்கான பொருளாதார சுயமேம்பாடு வேலைத்திட்டத்தை நடத்தி வருகிறார். சேலம் மக்களால் அன்போடு அழைக்கப்படும், ஆர்.பி.எஸ். தொடர்ந்து தனது நிறுவனத்தின் மூலம் பல சமூக சேவைகளை செய்து வருகிறார்.
பாரதிய ஜனதா கட்சியின் விவசாய அணி மாநில செயலாளராக பொறுப்பு வகிக்கும் ஆர்.பி.எஸ்., கட்சி பாகுபடுகளின்றி சேலம் மக்களின் முன்னேற்றத்திற்காக பணியாற்றி வருவதாக அப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் புகழாரம் சூட்டுகின்றனர்.
ஆர்.பி.எஸ். அளிக்கும் வேலை வாய்ப்பு திட்டத்தின் மூலம் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பயனடைந்து வருகின்றனர். இது குறித்து பேசிய அப்பகுதி பெண்கள், துணி பைகளை வீட்டில் இருந்து தைப்பதற்கு தையல் இயந்திரங்களை கொடுத்து, அதன் மூலம் மாதம் 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரை வருமானம் கிடைப்பதாகவும், தங்களின் குடும்ப வேலை போக மீதியுள்ள நேரங்களில் இந்த வேலை வாய்ப்பு திட்டத்தை பயன்படுத்திக் கொள்வதாகவும் தெரிவிக்கின்றனர்.
அந்த நிறுவனமே வீடு தேடி பணிகளை வழங்குவதாகவும், இதனால், தங்களின் குடும்பம் பொருளாதாரத்தில் தன்னிறைவு அடைவதாகவும், தங்கள் குழந்தைகளின் கல்வி செலவை இதன் மூலம் பூர்த்தி செய்வதாகவும் இன்முகத்துடன் தெரிவிக்கின்றனர்.
இந்த சேவை குறித்து ஆர்.பி.எஸ். தெரிவிக்கையில், பெண்களின் சமூக பொருளாதார முன்னேற்றத்திற்காக இந்த திட்டத்தை தனது நிறுவனத்தின் மூலம் செயல்படுத்துவதாக தெரிவித்தார். மேலும், ஆண்களுக்கு நிகராக பெண்களும் பொருளாதாரத்தில் மேம்பட வேண்டும் என்ற நோக்கத்தில் தான் செயல்படுவதாகவும், தான் சார்ந்த பாஜக தனக்கு கற்றுக்கொடுத்துள்ளதாகவும் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
நாள் ஒன்றுக்கு பெண்களின் சுய தொழில் மூலம் 1200 துணி பைகளை உற்பத்தி செய்ய வைத்து, இந்தியாவை தன்னிறைவு கொண்டதாகவும், பொருளாதார ரீதியாக துடிப்புமிக்கதாக மாற்றுவதில் பெண்களை பொருளாதார முகவர்களாக மாற்றுவதில் ஆர்.பி.எஸ்-ன் முயற்சி பெரும்பங்கு வகிக்கிறது என அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.