இந்தியாவில் ரூ.20,000-க்கு குறைவான பட்ஜெட்டில் கிட்டும் 5ஜி ஸமார்ட்போன்கள் – ஒரு பட்டியல்

இந்தியாவில் வெகு விரைவில் 5ஜி சேவை அறிமுகம் செய்யப்பட உள்ளது. அதற்கான பணியில் டெலிகாம் நிறுவனங்கள் பிசியாக இயங்கி வருகின்றன. இந்நிலையில், இந்திய சந்தையில் ரூ.20,000-க்கும் குறைவாக பட்ஜெட் விலையில் கிடைக்கும் ஸ்மார்ட்போன்கள் குறித்து பார்ப்போம்.

இந்த ஸ்மார்ட்டான டிஜிட்டல் யுகத்தில் வசித்து வரும் மக்களுக்கு அத்தியாவசியமானதாக உள்ளது ஸ்மார்ட்போன்கள். அது பள்ளி செல்லும் குழந்தைகள் தொடங்கி அனைத்து வயதினருக்கும் பொருந்தும். செல்போனை வடிவமைத்த மார்ட்டின் கூப்பர் கூட பின்னாளில் அதன் பரிணாம வளர்ச்சியானது இப்படி எல்லாம் இருக்கும் என கணித்திருக்கமாட்டார். அந்த அளவிற்கு மாறியுள்ளது செல்போன்.

‘ஹலோ’ சொல்வதில் தொடங்கி குறுஞ்செய்தி அனுப்ப, வீடியோ வடிவிலான உரையாடல் மேற்கொள்ள, பணம் அனுப்ப மற்றும் பெற, ஆன்லைன் டிக்கெட் புக் செய்ய, படம் பார்க்க, புத்தகம் வாசிக்க என மாயமானை போல ஸ்மார்ட்போன்களின் ஓட்டம் நீண்டு கொண்டே போகிறது. அதிலும் 5ஜி வந்துவிட்டால் இப்போதுள்ள இணைய இணைப்பின் வேகத்தை காட்டிலும் பன்மடங்கு கூடி படு ஸ்பீடாக இருக்கும் என சொல்லப்பட்டுள்ளது. அந்த ஸ்பீடுக்கு ஏற்ற வகையில் ஸ்மார்ட்போன் பயனர்களும் தயாராக இருக்க வேண்டியது அவசியமாகி உள்ளது.

அதற்கு பிரதான தேவை 5ஜி இணைப்பில் இயங்கக்கூடிய ஸ்மார்ட்போன். கடந்த ஜூலை மாத தரவுகளின் படி இந்தியாவில் சுமார் 50 மில்லியனுக்கும் மேற்பட்ட 5ஜி ஸ்மார்ட்போன்கள் பயன்பாட்டில் இருப்பதாக தகவல். 5ஜி அறிமுகம் செய்யப்படும் பட்சத்தில் இந்த எண்ணிக்கை மேலும் கூடுமாம். இந்த சூழலில் பட்ஜெட் விலையில் கிடைக்கும் 5ஜி ஸ்மார்ட்போன்கள் குறித்து தெரிந்து கொள்வோம்.

ஒன்பிளஸ் நார்ட் 2 CE Lite 5ஜி: 6.59 இன்ச் கொண்ட திரை, எல்சிடி டிஸ்பிளே, ஆண்ட்ராய்டு 12, பின்பக்கத்தில் மூன்று கேமரா கொண்டுள்ளது இந்த போன். அதில் பிரதான கேமரா 64 மெகாபிக்சலை கொண்டுள்ளது. 16 மெகாபிக்சல் கொண்ட செல்ஃபி கேமராவும் இதில் இடம்பெற்றுள்ளது. 5000mAh பேட்டரி, டைப் சி சார்ஜர் போன்றவையும் இதில் உள்ளது. 6/8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் வசதியை இந்த போன் கொண்டுள்ளது. இதன் விலை ரூ.19,999.

மோட்டோ ஜி62 5ஜி: ஃபுல் ஹெச்.டி ரெசல்யூஷனில் இயங்கும் 6.55 இன்ச் திரை அளவு, ஸ்னாப்டிராகன் 695 SoC சிப்செட், ஆண்ட்ராய்டு 12, பின்புறத்தில் மூன்று கேமரா இடம் பெற்றுள்ளது. அதில் பிரதான கேமரா 50 மெகாபிக்சலை கொண்டுள்ளது. சென்சார் அம்சம் கொண்ட 16 மெகாபிக்சல் செல்ஃபி கேமராவும் இடம் பெற்றுள்ளது. 5000mAh திறன் கொண்ட பேட்டரி இதில் உள்ளது.

6ஜிபி ரேம்+128ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ.17,999-க்கும், 8 ஜிபி ரேம்+128ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ.19,999-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

iQoo Z6 5ஜி: 6.58 இன்ச் திரை அளவு, 4/8 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 12, பின்பக்கத்தில் 3 கேமரா, டைப் சி சார்ஜர், 5000mAh திறன் கொண்ட பேட்டரி போன்றவை இடம் பெற்றுள்ளது. இந்த போனின் விலை ரூ.16,999. கேமிங்கிற்கு இந்த போன் உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரெட்மி நோட் 11T 5ஜி: சியோமியின் துணை நிறுவனமான ரெட்மி நிறுவனத்தின் நோட் 11T 5ஜி பட்ஜெட் போன்களுக்கு மற்றுமொரு சிறந்த ஆப்ஷனாக அமைந்துள்ளது. 6.6 இன்ச் திரை அளவு, டைமன்சிட்டி 810 சிப்செட், 5000mAh திறன் கொண்ட பேட்டரி, ஆண்ட்ராய்டு 11, பின்பக்கத்தில் இரண்டு கேமராவும் இடம் பெற்றுள்ளது. இந்த போனின் விலை ரூ.15,999. ரியல்மி 9 5ஜி போனும் இதே விலையில் கிடைக்கிறது.

இந்த போன்கள் அனைத்தும் ஸ்மார்போனின் துல்லிய இயக்கத்திற்கான சிப்களை கொண்டுள்ளன. டீசன்டான கேமரா மற்றும் பேட்டரி திறனை இந்த போன் கொண்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.