IMF-ல் முக்கியப் பதவி.. முன்னாள் CEA சுப்ரமணியன்-க்கு அடித்த ஜாக்பாட்..!

நரேந்திர மோடி அரசின் முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர்-ஆக இருந்த கிருஷ்ணமூர்த்திச் சுப்ரமணியன் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிர்வாகக் குழுவில் இந்தியாவுக்கான நிர்வாக இயக்குநராக வியாழக்கிழமை நியமிக்கப்பட்டார்.

இந்தியன் ஸ்கூல் ஆஃ பிசினஸில் பேராசிரியராகவும் (நிதி) இருக்கும் சுப்ரமணியன், சிறந்த பொருளாதார நிபுணரும் கட்டுரையாளருமான சுர்ஜித் எஸ் பல்லா-வுக்குப் பின் நியமிக்கப்பட உள்ளார்.

கிருஷ்ணமூர்த்திச் சுப்ரமணியன் இந்திய பிரதமர் மோடியின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் பகுதிநேர உறுப்பினராகவும் (EAC-PM) பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Cyber Attack: வெறும் 3 மாதத்தில் 18 மில்லியன் சைபர் தாக்குதல்கள்..!

சர்வதேச நாணய நிதியம்

சர்வதேச நாணய நிதியம்

வாஷிங்டன்-ஐ தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச நாணய நிதியம் உலக நாடுகளுக்குப் பொருளாதாரச் சரிவில் இருக்கும் நிதியுதவி செய்யும் மிக முக்கியமான அமைப்பாக இருக்கும் காரணத்தால், இந்த அமைப்பின் உயர் அதிகாரிகள் அறிவிப்புகளும், முடிவுகளும் உலக நாடுகளின் வளர்ச்சிக்கு மிகமுக்கியமானதாக உள்ளது.

கீதா கோபிநாத்

கீதா கோபிநாத்

இந்திய அமெரிக்கரான கீதா கோபிநாத் சர்வதேச நாணய நிதியத்தின் தலைமை பொருளாதார ஆலோசகராக இருந்தார், இவருடைய பணிக் காலம் ஜனவரி 2022ல் முடிந்த நிலையில் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தனது பணியில் சேர முடிவு செய்த அடுத்தச் சில நாட்களில் ஐஎம்எப் அமைப்புக் கீதா கோபிநாத்-ஐ முதல் துணை நிர்வாகத் தலைவராக நியமிக்க முடிவு செய்தது.

ஐஎம்எப் அமைப்பு முதல் துணை நிர்வாகத் தலைவர் பதவியில் இருக்கும் முதல் இந்தியர் இவர் தான்.

நரேந்திர மோடி
 

நரேந்திர மோடி

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவையின் நியமனக் குழு, 01.11.2022 முதல் மூன்று ஆண்டுகளுக்கு அல்லது மறு உத்தரவு வரும் வரை கிருஷ்ணமூர்த்திச் சுப்ரமணியன் நியமிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.

 தலைமை பொருளாதார ஆலோசகர்

தலைமை பொருளாதார ஆலோசகர்

கடந்த ஆண்டு அக்டோபரில் தனது மூன்றாண்டு தலைமை பொருளாதார ஆலோசகர் பதவிக்காலம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து சுப்பிரமணியன் CEA பதவியில் இருந்து விலகினார். கேவி சுப்பிரமணியன் தலைமை பொருளாதார ஆலோசகராக டிசம்பர் 7, 2018ல் பதவியேற்றார், இவர் பதவியேற்றிய 5 மாதத்தில் முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகரான அரவிந்த் சுப்பிரமணியன் பதிவி விலகினார்.

கிருஷ்ணமூர்த்தி வெங்கட சுப்பிரமணியன்

கிருஷ்ணமூர்த்தி வெங்கட சுப்பிரமணியன்

கிருஷ்ணமூர்த்தி வெங்கட சுப்பிரமணியன் என்பதன் சுருக்கமே கேவி சுப்பிரமணியன். இவர் சட்டிஸ்கர் மாநிலத்தில் பிறந்தாலும் தமிழ் குடும்பத்தைச் சேர்ந்தவர்.இவர் ஐஐடி கான்பூரில் பிடெக், ஐஐஎம் கல்கத்தா-வில் எம்பிஏ, சிகாகோ பல்கலைகழகத்தில் எம்பிஏ மற்றும் பிஹெச்டி பட்டம் பெற்றவர்.

 முக்கியப் பணிகள்

முக்கியப் பணிகள்

கிருஷ்ணமூர்த்தி வெங்கட சுப்பிரமணியன் ஜேபி மோர்கன் சேஸ், ஐசிஐசிஐ வங்கி, டிசிஎஸ் ஆகிய நிறுவனத்தில் பணியாற்றியுள்ளார். இதுமட்டும் அல்லாமல் பந்தன் வங்கி மற்றும் தேசிய வங்கி நிர்வாகக் கல்லூரி மற்றும் ஆர்பிஐ அகாடமியின் நிர்வாகக் குழு உறுப்பினராக இருந்துள்ளார். இதோடு செபி மற்றும் ரிசர்வ் வங்கியின் முக்கியப் பதவிகளிலும் கிருஷ்ணமூர்த்தி வெங்கட சுப்பிரமணியன் பணியாற்றியுள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Former Chief Economic Adviser K Subramanian as Executive Director for India at IMF

Former Chief Economic Adviser K Subramanian as Executive Director for India at IMF | IMF-ல் முக்கியப் பதவி.. முன்னாள் CEA சுப்ரமணியன்-க்கு அடித்த ஜாக்பாட்..!

Story first published: Thursday, August 25, 2022, 21:31 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.