கொழும்பு பங்குச் சந்தையில் கடும் சரிவு


கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்று (25) 183.16 அலகுகளாக பாரிய வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

இது முந்தைய நாளுடன் ஒப்பிடும் போது 2.03 வீத சரிவாகும் என்பதுடன், நாள் முடிவில் அனைத்து பங்கு விலை குறியீட்டு மதிப்பு 8,828.08 அலகுகளாக பதிவு செய்யப்பட்டது.

இதற்கிடையில், S&P SL20 சுட்டெண் நாளின் போது 78.27 புள்ளிகள் சரிந்து 2,866.23 புள்ளிகளாக பதிவாகியது. இது முந்தைய நாளுடன் ஒப்பிடும் போது 2.66 வீத சரிவாகும்.

இன்றைய மொத்த பரிவர்த்தனை விற்பனை முதல் 2.10 பில்லியனாக ரூபாவாக பதிவு செய்யப்பட்டது.

கொழும்பு பங்குச் சந்தையில் கடும் சரிவு | Heavy Decline In The Colombo Stock Market

ஒரு நாளில் பதிவான மிகக் குறைந்த விற்பனை முதல் 

இந்த வாரத்தில் ஒரு நாளில் பதிவான மிகக் குறைந்த விற்பனை முதல் இதுவாகும்.

1.89 பில்லியன் ரூபா உள்நாட்டு கொள்முதல் மற்றும் 2.03 பில்லியன் ரூபா உள்நாட்டு விற்பனையாகவும் பதிவாகியுள்ளதுடன் 115.67 மில்லியன் ரூபா வெளிநாட்டு கொள்முதல் மற்றும் 65.98 மில்லியன் ரூபா வெளிநாட்டு விற்பனையாக பதிவாகியுள்ளது.

எக்ஸ்போலங்கா ஹோல்டிங்ஸ், எல்ஓஎல்சி ஹோல்டிங்ஸ், ஹேலிஸ், லங்கா ஐஓசி மற்றும் எய்ட்கென் ஸ்பென்ஸ் ஆகிய பங்குகளின் விலைகளில் ஏற்பட்ட சரிவு அனைத்து Equity சுட்டெண்களில் நாளின் வீழ்ச்சிக்கு முக்கிய உந்துதலாக இருந்தது.

இன்று, 157 நிறுவனங்களின் பங்குகளின் விலைகள் முந்தைய நாளை ஒப்பிடுகையில் குறைந்துள்ளதுடன் 54 நிறுவனங்களின் விலைகள் மட்டுமே அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.