சென்னை: சென்னையில் ஒரே நாளில் 34 கஞ்சா வியாபாரிகளின் வங்கி கணக்குகளை போலீசார் அதிரடியாக முடக்கினர். கடந்த 2 ஆண்டில் 504 பேரின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தகவல் தெரிவித்தது. ஒரு கிலோ மற்றும் அதற்கு மேற்பட்ட போதை பொருட்களுடன் பிடிபட்டவர்களின் வங்கி கணக்குகளை முடக்கும் நடவடிக்கை தொடரும் என காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை விடுத்தார்.