இந்தியாவின் முன்னணி வணிக குழுமங்களில் ஒன்றான மஹிந்திரா குழுமத்தின் தலைவரான, ஆனந்த் மஹிந்திரா, சமூக வலைதளங்களில் எப்போதும் படு பிசியாக இருப்பவர். அவ்வப்போது தனக்கு பிடித்தமான, சுவாரஸ்யமான, எதிர்த்தமான பதிவுகளை பதிவிடுவது இவரின் வழக்கம்.
இதற்காகவே இவரை ட்விட்டரில் தொடரும் ஒரு ரசிகர் பட்டாளமும் உண்டு. அப்படி இவர் பதிவிட்ட ஒன்று அதிகளவில் பகிரப்பட்டு வருகின்றது. இதற்கு பல நெட்டிசன்களும் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றார்.
அப்படி என்ன தான் பதிவிட்டார்? அதன் மூலம் என்ன சொல்ல வருகின்றார்? வாருங்கள் பார்க்கலாம்.
எலக்டிரிக் ஜீப் தயாரித்து ஆனந்த் மஹிந்திராவிடம் வேலை கேட்ட தமிழ்நாடு இளைஞர்!
எது விஷம்?
தனது ட்விட்டர் பக்கத்தில் ஆனந்த் மஹிந்திரா, ஷாமனின் சிந்தனை பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் ஷாமனிடம் விஷத்திற்கான அர்த்தம் என்ன என்று கேட்கப்பட்டுள்ளது. அதற்கு அவர் நமக்கு தேவைக்கு அப்பாற்பட்ட எதுவும் விஷம் தான். அது அதிகாரம், சோம்பல், உணவு, ஈகோ குணம், லட்சியம், மாயை, பயம், கோபம் அல்லது எதுவாக இருந்தாலும் சரி.
சிறந்த குறிக்கோள்
இதற்கு தனது கேப்சனில் இன்று காலை எனது #Signalwonderbox – -ல் வந்தது. இது குறித்து மகிழ்ச்சி அடைகிறேன். வாழ்க்கையின் சிறந்த குறிக்கோள் என்பது அதிகமாக பெறுவது அல்ல, அவை குறைவாக செய்வதே என பதிவிட்டுள்ளார்.
உண்மையான வரிகள்
ஆனந்த் மஹிந்திராவின் இந்த பதிவானது பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. பலரும் தங்களது கமண்ட் மழையை பொழிந்து வருகின்றனர். அழகான வரிகள் மற்றும் பொருத்தமான வரிகள் என்று ஒரு ட்விட்டர் பயனர் தெரிவித்துள்ளார்.
பல ட்விட்டர் பயனர்களும் இது உண்மையான வரிகள் என கூறியுள்ளனர்.
பிரச்சனை தான்
மற்றொரு பயனர் நமது உணர்ச்சிகள், அன்பு, பாசம் எல்லாம் கூட ஒரு வகையில் அப்படி தான் என்று பதிவிட்டுள்ளார்.
உண்மையில் நாம் வாழ்க்கையில் நமக்கு தேவையானதை தாண்டி செல்லும் போது, அது ஒரு காலகட்டத்தில் பிரச்சனையாகவே மாறும், அது உண்மையான அன்பாக இருந்தாலும் சரி, அதிகளவிலான பணமாக இருந்தாலும் சரி, இதனை மற்றவர்களும் நிச்சயம் புரிந்து கொள்ள வேண்டிய ஒரு விஷயம் தான். நிச்சயம் இது அருமையான ஒரு பதிவு தான்.
Anand mahindra’s new post on the definition of poison: such a beautiful message
Anand mahindra’s new post on the definition of poison: such a beautiful message/இது தான் உண்மையான விஷம்.. ஆனந்த் மஹிந்திராவின் அற்புதமான பதிவு!