பேரிச்சம் பழம் வெறும் வயிற்றில் சாப்பிடுவது நல்லதா? எப்போது சாப்பிட வேண்டும்..

பேரிச்சம் பழம் அதிக கலோரிகள் இருப்பதால் அதை எப்போது சாப்பிட வேண்டும் என்ற சந்தேகம் வருவது இயல்பு. பேரிச்சம் பழத்தில் அதிக நார்சத்து இருக்கிறது. இது நமது ஒட்டு மொத்த அரோக்கியத்திற்கும் நன்மை தருகிறது. ஜீரண மண்டலத்தை சீர்படுத்த உதவுகிறது. இதில் இருக்கும் ஆன்டி ஆக்ஸிடன்ட் அதிக நன்மைகள் அளிக்கிறது.

இரவில் ஊரவைத்து மறுநள் பேரிச்சம் பழம் சாப்பிடுவதா ? அல்லது வெறும் வயிற்றில் பேரிசம்பழம் சாப்பிடுவதா ? இரவு தூங்கப்போவதற்கு முன்பு பேரிச்சம் பழம் சாப்பிடுவதா ? என்ற குழப்பம் இருக்கும்.

நீங்கள் உடல் பயிற்சி செய்வதற்கு 30 முதல் 60 நிமிடங்களுக்கு முன்பு பேரிச்சம் பழம் சாப்பிடுவது நல்லது. மேலும் இது உடலுக்கு அதிக ஆரோக்கியத்தை தரும் என்பதால் இரவு தூங்கு வதற்கு முன்பு நீங்கள் சாப்பிடலாம்.

குடலில் உள்ள  புழுக்களை கொல்வதற்கு, சுத்தம் செய்வதற்கும் பேரிச்சம் பழம் உதவும் என்பதால் வெறும் வயிற்றிலும் பேரிச்சம் பழம் சாப்பிடலாம். மேலும் சருமம் பொலிவாக இருக்கவும் கூந்தல் வளரவும் உதவுகிறது.

உடல் எடை குறையவும், மலச்சிக்கல் மற்றும் எலும்பு வலுப்பெறவும். மூளை மற்றும் இதயம் தொடர்பான நோய்களை குணப்படுத்தவும் இப்பழம் உதவுகிறது.

மேலும் நீங்கள் நன்றாக சாப்பிட பிறகு பேரிச்சம் பழம் சாப்பிடுவதை தவிப்பது நல்லது. இது அஜீரணத்தை ஏற்படுத்தலாம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.