தஞ்சாவூர் அருகே சோகம் தாய் தற்கொலை செய்ததால் மகனும் தூக்கில் தொங்கினார்

பாபநாசம்: தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அடுத்த திருப்பாலைத்துறையை சேர்ந்தவர் வசந்தா (52). இவரது கணவர் ஜெகதீசன் இறந்து விட்டார். இவர்களுக்கு 3 மகன்கள். வசந்தா நீண்ட நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக மருந்து, மாத்திரைகள் சாப்பிட்டும் குணமாகாமல் வேதனையில் இருந்தார். இந்நிலையில், நேற்றுமுன்தினம் திடீரென அவரை காணவில்லை. அவரது 2வது மகன் அன்பரசன் (28) பல்வேறு இடங்களில் தேடியும் தாய் கிடைக்கவில்லை. நேற்று 2வது நாளாக தாயை தேடி அன்பரசன் சென்றார்.
அப்போது குடமுருட்டி ஆற்றுப்பகுதியில் ஒரு மரத்தில் வசந்தா தூக்கு போட்ட நிலையில் சடலமாக தொங்கி கொண்டிருந்ததை பார்த்து கதறி அழுதார். துக்கத்தை தாங்க முடியாமல் அன்பரசனும் அதே மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.