ஐதராபாத்: முகமது நபிகள் குறித்து இழிவாக பேசியதாக தெலங்கானாவில் பாஜ எம்எல்ஏ ராஜா சிங்கை கடந்த 23ம் தேதி அம்மாநில போலீசார் கைது செய்தனர். இதற்கிடையே, உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி போலீசார் அவரை கைது செய்யாததால் அன்றைய தினமே ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். இதை கண்டித்தும், எம்எல்ஏ ராஜா சிங்குக்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டது. இந்நிலையில், ஜாமீனில் வந்த எம்எல்ஏ ராஜா சிங், தெலங்கானா முதல்வர் சந்திர சேகர ராவின் மகன் ராமராவ், வாக்கு வங்கி அரசியலில் ஈடுபடுவதாக வீடியோ வெளியிட்டார். ஜாமீன் நிபந்தனைகள மீறி இதுபோன்ற வீடியோவை வெளியிட்டதால், எம்எல்ஏ ராஜா சிங்கை ஐதராபாத் போலீசார் நேற்று கைது செய்தனர்.