தஞ்சை: தஞ்சாவூரில் மாவட்ட ஊராட்சி மன்ற குழு தலைவர் உஷா புன்னியமூர்த்தி தலைமையில் துணை தலைவர் முத்துச்செல்வன், ஊராட்சி செயலர் முன்னிலையில் நேற்று காலை பனகல் கட்டடத்தில் மாவட்ட ஊராட்சி மன்ற சாதாரண கூட்டம் நடைபெற்றது. இதில் அனைத்து உள்ளாட்சி மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை கூறினார். இதில் ஊராட்சி மன்ற குழு உறுப்பினர் கூறியதாவது: அனைத்து புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என அனைத்து ஆணையர்களுக்கும் வலிவுறுத்தினர். மேலும் அடுத்த கூட்டத்தில் நேற்று விவாதிக்கப்பட கோரிக்கைகள் அனைத்தும் தீர்மானங்களாக பதிவிடப்படும்.
அதேபோல் அனைத்து ஊராட்சிகளில் உள்ள கோவில்கள், பள்ளிக்கூடங்கள், ரேஷன் கடைகள், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தற்போது மழை காலம் என்பதால் நோய் அதிகம் பிரவும் அபாயம் உள்ளது. ஆகவே அனைத்து பகுதிகளில் கிளோரின் பவுடர் தெளிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார். வடசேரி பகுதியில் 4 கிலோ.மீ தூரத்திற்கு சாலை வசதி இல்லை எனவும், இதுகுறித்து நான் பல கூட்டங்களில் கூறினேன், இதுவரை எந்த நடவடிக்கைகளும் எடுக்கவில்லை என உறுப்பினர் ஒருவர் கூறினார். ஒன்றிய அலுவலகத்தில் உள்ள கல்வட்டில் பெருந்தலைவர் பெயரோ, உறுப்பினர்கள் பெயரோ ஒரு சில இடங்களில் பொறிக்கப்படாமல் உள்ளது.
இதனால் மக்களுக்கு செய்யப்பட்டு வரும் நல திட்ட உதவிகள் வெளியில் தெரியாமல் போகிறது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு சில பகுதிகளில் இ சேவை மையங்கள் சரியான முறையில் செயல்படாததால் விவசாயிகளுக்கு கிடைக்கும் நலத்திட்ட உதவிகள் கிடைக்காத நிலை உருவாகி உள்ளது. இவ்வாறு உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். உறுப்பினர்கள் கூறிய அனைத்து கோரிக்கைகளையும் 10 முதல் 15 நாட்களில் நிறைவேற்ற வேண்டும் எனவும், தற்போது மழை காலம் என்பதால் தார்பாய், சாக் போன்ற பொருட்களை அதிக அளவில் வைத்திருக்க வேண்டும். மேலும் மக்கள் தேவைப்படும் அனைத்து கோரிக்கைகளையும் துரிதமாக நடைமுறை படுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
மேலும் மாவட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உறுப்பினர்களின் பெயர் பலகை வைக்கப்படும். 75வது சுகந்திர தினம் முடிந்ததை முன்னிட்டு விரைவில் மரக்கன்றுகள் நடப்படும் என கூறினார். இந்நிகழ்வில் தஞ்சை மாவட்ட வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பொதுப்பணித்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.