கோதுமை மாவு ஏற்றுமதிக்கு திடீர் தடை.. மத்திய அரசின் அறிவிப்பு ஏன்?

கோதுமை மற்றும் கோதுமை மாவு விலை ஏற்றத்தை உள்நாட்டில் கட்டுப்படுத்துவதற்காக ஏற்றுமதியில் சில கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்து உள்ளதாக தகவல் வெளியாகி விட்டன.

பிரதமர் மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு நேற்று கூடியது.

இந்த கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ள நிலையில் கோதுமை மாவு ஏற்றுமதிக்கு சில கட்டுப்பாடுகள் விதித்து உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அரசு ஊழியர்கள் இந்த வங்கியில் சம்பள கணக்கு வைக்க கூடாது.. அதிரடி உத்தரவு!

கோதுமை ஏற்றுமதி

கோதுமை ஏற்றுமதி

கோதுமை ஏற்றுமதி கொள்கையில் திருத்தம் கொண்டு வரவும், கோதுமை மற்றும் கோதுமை மாவு ஏற்றுமதியில் உள்ள விதிவிலக்குகளை நீக்கவும் அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்துள்ளது. இதுகுறித்து மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம், வெளிநாட்டு வர்த்தக இயக்குனர் அலுவலகத்திற்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

விலை உயர்வு

விலை உயர்வு

கோதுமை மாவு விலை உயர்வை கட்டுப்படுத்துவதற்காக கோதுமை மாவு ஏற்றுமதிக்கு கட்டுப்பட்டு விதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததில் இருந்து உலகம் முழுவதும் கோதுமை பற்றாக்குறை இருந்ததன் காரணமாக பல்வேறு நாடுகளுக்கு இந்தியா கோதுமையை ஏற்றுமதி செய்தது.

உணவு பாதுகாப்பு
 

உணவு பாதுகாப்பு

ஆனால் அதே நேரத்தில் உள்நாட்டில் கோதுமை பற்றாக்குறை ஏற்பட கூடாது என்பதிலும் மத்திய அரசு கவனத்துடன் இருந்தது. இந்த நிலையில் கோதுமை ஏற்றுமதி அதிகரித்ததன் காரணமாக உள்நாட்டில் கோதுமை விலை உயர்ந்ததாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில் தற்போது கோதுமை ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இதன் காரணமாக இந்தியாவில் உள்ள 140 கோடி மக்களின் உணவு பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

சர்வதேச சந்தையில் கோதுமை

சர்வதேச சந்தையில் கோதுமை

இந்தியா கோதுமை ஏற்றுமதிக்கு தடை விதித்ததால் சர்வதேச சந்தையில் கோதுமை மாவுக்கான தேவை அதிகரித்துள்ளதாகவும் குறிப்பாக ஏப்ரல் முதல் ஜூலை வரை 200 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொள்கை

கொள்கை

 

முன்னதாக கோதுமை மாவு ஏற்றுமதிக்கு எந்தவித தடையும் கட்டுப்பாடும் விதிக்கக்கூடாது என கொள்கை அளவில் மத்திய அரசு முடிவு செய்திருந்தது. ஆனால் தற்போது நாட்டின் உணவு பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவும் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்துவதற்காகவும் ஏற்றுமதியில் கட்டுப்பாடு விதிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Govt decides to put restrictions on export of wheat flour to curb prices

Govt decides to put restrictions on export of wheat flour to curb prices | கோதுமை மாவு ஏற்றுமதிக்கு திடீர் தடை.. மத்திய அரசின் அறிவிப்பு ஏன்?

Story first published: Friday, August 26, 2022, 10:04 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.