அசாமில் 10ம் வகுப்பு தேர்வில் ஒரு மாணவர் கூட தேர்ச்சி பெறாத 34 பள்ளிகளை மூட அம்மாநில கல்வித்துறை முடிவு..!!

திஸ்பூர்: அசாமில் 10ம் வகுப்பு தேர்வில் ஒரு மாணவர் கூட தேர்ச்சி பெறாத 34 பள்ளிகளை மூட அம்மாநில கல்வித்துறை அறிவித்துள்ளது. அரசின் நடவடிக்கைக்கு அசாம் எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. அசாம் மாநிலத்தில் கடந்த மாதம் வெளியான 10ம் வகுப்பு தேர்வு முடிவுகளில் 56.49 சதவிகிதம் பேர் தேர்ச்சி அடைந்திருந்தனர். இந்த தேர்வில் 34 அரசு பள்ளிகளில் இருந்து தேர்வு எழுதிய 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் அனைவரும் தோல்வி அடைந்தனர். இந்த 34 பள்ளிகளையும் மூட அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. அரசின் இந்த முடிவு அம்மாநிலத்தில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம்  பேசிய, அசாம் மாநில கல்வித்துறை அமைச்சர் ரனோஜ் பெகு, ஒரு மாணவரை கூட தேர்ச்சி பெற வைக்க முடியாத பள்ளிகளுக்கு மக்களின் வரி பணத்தை செலவிடுவது அர்த்தமற்றது என்றும் தேர்ச்சி விகிதம் இல்லை என்றால் அந்த பள்ளிகள் இல்லாமல் இருப்பதே நல்லது என்றும் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தற்போது மூடப்படும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை எங்கு சேர்ப்பது என கேள்வி எழுப்பிய அசாம் மாநில எதிர்க்கட்சிகள், 34 பள்ளிகள் 100 சதவீதம் தோல்வியடைந்ததற்கு பொறுப்பேற்று அமைச்சர் ரனோஜ் பதவி விலக வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.