சமீபத்தில் உலகையே உலுக்கிய பெகாசஸ் என்ற ஸ்பைவேரை யாரும் மறந்திருக்க மாட்டோம். பெரிய பெரிய அரசியல் புள்ளிகள் முதல் பிரபலங்கள் வரை பயந்து கொண்டிருந்த தருணம். ஒரு வேளை இருக்குமோ? என எல்லார் மனதிற்குள்ளும் அச்சம் ஊஞ்சலாடி கொண்டிருந்த சமயம்.
வேறொன்றுமிலை சில மாதங்களுக்கு முன்பு இஸ்ரேலை சேர்ந்த பெகாசஸ் என்ற உளவு பார்க்கும் மால்வேர்(malware) தான் இப்படி பலரையும் பீதியில் ஆழ்த்தியது. ஒரு மெசேஜ், மெயில், ஏன் ஒரு வாட்சப் மிஸ்ட்கால் மூலமாக கூட உங்கள் போன் அல்லது சிஸ்டமில் இந்த மல்வேரை புகுத்தி உங்கள் அனுமதி இல்லாமலே உங்கள் தரவுகளை திருட முடியும்.உங்கள் நடவடிக்கைகளை உங்கள் டிவைஸை வைத்தே வீடியோ ஆடியோவோடு கண்காணிக்க முடியும்.
அதை பற்றி ஏன் இப்போது சொல்லி கொண்டிருக்கிறாய் என நீங்கள் நினைப்பது புரிகிறது. பலரும் அதை இன்னும் மறந்திருக்க வாய்ப்பில்லை. எனவே அதன் முழுமையான தகவல்கள் மற்றும் அதிலிருந்து எப்படி தப்பிப்பது , எதிர்காலத்தில் அது என்னென்ன விளைவுகளை ஏற்படுத்தலாம் என்பனவற்றை விரிவாக பார்ப்போம்.
பெகாசஸ் என்பது யாதெனில்..
முன்பே சொன்னது போல் பெகாசஸ் என்பது உளவு பார்க்க கூடிய மால்வேர்(malware). இஸ்ரேலிய சைபர் இன்டெலிஜென்ஸ் அமைப்பான NSO குரூப்பின் மூலமாக தயாரிக்கப்பட்ட ஸ்பைவேர் தான் இது. இது முதலில் உருவாக்கப்படும்போது தீவிரவாத செயல்களை கட்டுப்படுத்தவும், பயங்கரவாத திட்டமிடல்களை தடுக்கவும் அரசுக்கு உதவ பயன்படுத்த படுவதாக கூறப்பட்டது.
ஆனால் ஒரு சில வருடங்களுக்கு முன்பு ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த மனித உரிமை செயல்பாட்டாளர் ஒருவருக்கு இது போன்ற ஒரு அடையாளம் தெரியாத எண்ணிலிருந்த்து லின்க் ஒன்று மெசேஜ் வழியாக வந்துள்ளது. நல்ல வேளையாக அவர் அதை திறக்காமல் செக்யூரிட்டி ஏஜென்சி ஒன்றுக்கு அனுப்பியுள்ளார். அதன் பிறகுதான் அது ஒரு உளவு பார்க்கும் ஸ்பைவேர் என்பதே உலகுக்கு தெரிய வந்தது.
சமீபத்தில் கூட பல்வேறு நாடுகளை சேர்ந்த அரசுகள் , தனியார் நிறுவனங்கள் இந்த ஸ்பைவேரை பயன்படுத்தி பலரை உளவு பார்த்ததாக சர்ச்சைகள் எழுந்தது நமக்கு நினைவிருக்கும்.அதற்கு நமது இந்திய தலைகளும் விதி விளக்கல்ல. தமிழகத்தை சேர்ந்த செயற்பட்டாளர்கள் பலரே இதன் மூலம் கனகாணிக்க பட்டதாக தகவல்கள் வெளியாகின.
முன்பே சொன்னது போல ஒரு மெசேஜ், மெயில், ஏன் ஒரு வாட்சப் மிஸ்ட்கால் மூலமாக கூட உங்கள் போன் அல்லது சிஸ்டமில் இந்த மல்வேரை புகுத்தி விட முடியும். நீங்கள் அந்த மெசேஜில் உள்ள லின்கை கூட க்ளிக் செய்ய வேண்டிய அவசியமில்லை. அவர்கள் அனுப்பும் ஏதோ ஒன்று உங்கள் டிவைஸை வந்தடைந்தால் போதுமானது. இதன் மூலம் உங்கள் டிவைஸில் உள்ள அந்தரங்க தகவல்கள், பாஸ்வோர்ட் , படங்கள், தரவுகள் , கேமராக்கள் என எல்லாவற்றையும் அவர்களால் கையாள முடியும்.
இதனால் நமக்கென்ன பயம்?
தற்போதைக்கு நமக்கு எந்த பயமும் இல்லை. காரணம் இந்த ஸ்பைவேரை பயன்படுத்தி ஒரு நபரின் போனை கண்காணிக்க வேண்டுமானால் கிட்டத்தட்ட அரை கோடி செலவாகும். அந்தளவு இந்த ஸ்பைவேர் விலை அதிகம். எனவே முக்கிய புள்ளிகளை தாண்டி யாரையும் இத்தனை செலவு செய்து கண்காணிக்க வாய்ப்பில்லை.
ஆனால் உலகம் டிஜிட்டல்மயத்தை நோக்கி நடை போட துவங்கி விட்டது. இந்நிலையில் எதிர்காலத்தில் இது போன்ற அல்லது இதை விட சக்திமிகுந்த ஸ்பைவேர்கள் தோன்றலாம். அப்போது அதன் விலை மலிவாகலாம். எனவே யார் வேண்டுமானாலும் யாரையும் கண்காணிக்கலாம் என்ற நிலை வந்தால் அது தனி மனிதனின் அந்தரங்கத்தை பாதிப்பதாக அமையலாம். மேலும் அது உலகையே கூட அழிவு பாதைக்கு கொண்டு செல்லலாம். குறிப்பாக பயங்கரவாதிகள் கையில் பெகாசஸ் போன்ற ஸ்பைவேர்கள் கிடைத்தால் சொல்லவே வேண்டாம்.
எப்படி தப்பிப்பது?
டிஜிட்டல் யுகத்தில் இங்கு எல்லாமே ஒன்றுக்கொன்று தொடர்புடையதுதான். நீங்கள் ஸ்மார்ட் டிவைஸ்கள் வைத்திருந்தாலே உங்களை யார் வேண்டுமானாலும் கண்காணிக்க முடியும் என்ற நிலை உள்ளது. எனவே இது போன்ற ஸ்பைவேர்கள் எல்லாம் சுலபமாக நுழைய கூடிய வகையில்தான் உள்ளன. இதிலிருந்து முன்னெச்சரிக்கையாக வேண்டுமானால் இருக்கலாம்.
தொடர்ந்து உங்கள் போன்களை அப்டேட் செய்து வைப்பது. அடையாளம் தெரியாத எண்களில் இருந்து வரம் அழைப்புகள், மெசேஜ்கள், மெயில்கள் போன்றவற்றிற்கு பதிலளிக்காமல் இருப்பது. பொது இடங்களில் பயன்படுத்தப்படும் wifi வசதிகளை தவிர்ப்பது மற்றும் முக்கியமான தரவுகளை பேக்கப் எடுத்து வைத்து கொள்வது போன்றவை உங்களுக்கு உதவலாம்.
– சுபாஷ் சந்திரபோஸ்