Tamil news today live: கள்ளக்குறிச்சி பள்ளி நிர்வாகிகளுக்கு ஜாமின் வழங்கியது சென்னை உயர்நீதிமன்றம்

பெட்ரோல் டீசல் விலை

பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை. பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63-க்கும் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கனல் கண்ணனின் ஜாமின் மனு தள்ளுபடி

 சண்டை கலைஞர் கனல் கண்ணனின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தது சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம். பெரியார் சிலை குறித்து சர்ச்சையாக பேசிய வழக்கில் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

கொடநாடு வழக்கு இன்று விசாரணை

கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு தொடர்பாக உதகை நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற உள்ளது. வழக்கு விசாரணைக்கு சயான் உள்ளிட்ட 10 பேரும் ஆஜராகின்றனர். ஜெயலலிதா மரணமடைந்த பின்னர், கொடநாடு எஸ்டேட்டில் நடைபெற்ற கொலை மற்றும் கொள்ளை பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு நேரடி தொடர்பு இருப்பதாக கூறப்படுவதால் இது மேலும் முக்கியத்துவம் பெறுகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Live Updates
11:37 (IST) 26 Aug 2022
கள்ளக்குறிச்சி பள்ளி நிர்வாகிகளுக்கு ஜாமின்

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரண வழக்கில் பள்ளி தாளாளர் உள்பட 5 பேருக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஜாமின் வழங்கியது.

11:10 (IST) 26 Aug 2022
அடிப்படை வசதிகளை மேற்கொள்ள ரூ. 752 கோடி நிதி ஒதுக்கீடு

உள்ளாட்சி அமைப்புகளுக்கு அடிப்படை வசதிகளை மேற்கொள்ள ரூ. 752 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது தமிழக அரசு

11:06 (IST) 26 Aug 2022
தேர்தல் இலவசங்களை அறிவிக்க தடை கோரிய வழக்கு

அரசியல் கட்சிகள் தேர்தல் இலவசங்களை அறிவிக்க தடை கோரிய வழக்கில், விரிவான விவாதம் தேவை என்பதால் வழக்கை, 3 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார். வழக்கு விசாரணையை 4 வாரங்களுக்கு தள்ளி வைக்கப்பட்டது.

09:20 (IST) 26 Aug 2022
செப்.7ல் நீட் தேர்வு முடிவுகள்

நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு ஜூலை 17ம் தேதி நடைபெற்றது. தேர்வு முடிவுகள் செப்டம்பர் 7ம் தேதி வெளியீடு நீட் தேர்வு இறுதி விடைக்குறிப்பு ஆகஸ்ட் 30ம் தேதி வெளியாகிறது – தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

08:52 (IST) 26 Aug 2022
ஒகேனக்கலில் மீண்டும் வெள்ளப்பெருக்கு

ஒகேனக்கலில் மீண்டும் வெள்ளப்பெருக்கு. கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை. நீர்வரத்து ஒரே நாளில் 14,000 கன அடியிலிருந்து 55,000 கன அடியாக உயர்வு.

08:51 (IST) 26 Aug 2022
நிதி நிறுவன உரிமையாளர் கொலை வழக்கு; 3 பேர் கைது

நாமக்கல்லில் நிதி நிறுவன உரிமையாளர் கடத்தி கொல்லப்பட்ட விவகாரம். நிதி நிறுவன மேலாளர்கள் பிரகாஷ், குணசேகரன் உள்பட 3 பேரை கைது செய்தது தனிப்படை

08:50 (IST) 26 Aug 2022
விநாயகர் சதுர்த்தி; 20 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னை மாநகரில் பாதுகாப்பு பணியில் 20 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர். காசிமேடு, பட்டினப்பாக்கம், எலியட்ஸ் கடற்கரை, திருவான்மியூர் ஆகிய இடங்களில் மட்டுமே சிலைகளை கரைக்க அனுமதி.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.