தி.நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இயக்குனர் பாரதிராஜா மேல் சிகிச்சைக்காக எம்.ஜி.எம் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்.
கோலிவுட் சினிமாவில் பிரபல இயக்குனர் பாரதிராஜா கடந்த வாரம் மதுரை விமான நிலையத்தில் மயக்கமடைந்த காரணத்தால் ஒரு நாள் மதுரையிலேயே ஓய்வெடுத்துவிட்டு பின், சென்னைக்கு திரும்பினார்.
அதன்பின்னர் நீலாங்கரையில் இருக்கும் தனது இல்லத்தில் ஓய்வெடுத்த நிலையில் அவருக்கு மீண்டும் அஜீரண கோளாறு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, சென்னையில் இருக்கும் மருத்துவமனையில் பாரதிராஜா பரிசோதனைக்கு அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு பரிசோதனைகள் முடிந்து, தற்போது சிகிச்சை நடைபெற்று வந்தது. இத்தகைய நிலையில், தி.நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இயக்குனர் பாரதிராஜா மேல் சிகிச்சைக்காக எம்.ஜி.எம் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்.