மும்பை : தென்னிந்திய திரைப்படங்கள் தொடர்ந்து வெற்றி பெற முக்கிய காரணமே அங்கு கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என முன்னணி நடிகர் அனுபம் கெர் தெரிவித்துள்ளார்.
சிறந்த குணச்சித்திர நடிகர் எனப் பெயர் பெற்ற அனுபர் கெர், இந்தியில் 500க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் வில்லனாகவும், நகைச்சுவை நடிகராகவும் நடித்துள்ளார்.
இவரது நடிப்பு திறமையைப் பாராட்டி, அவருக்கு பத்ம ஸ்ரீ, பத்மபூஷண் ஆகிய விருதுகளை வழங்கி மத்திய அரசு கௌரவித்துள்ளது. இவர் இந்தியத் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி கல்வி நிறுவனத்தின் தலைவராகவும் இருந்து வருகிறார்.
பாலிவுட் படங்கள் தோல்வி
இந்த ஆண்டு வெளியான தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம் தான் அதிக வசூலைக்குவித்த திரைப்படம் எனலாம், சமீபத்தில் வெளியான பாலிவுட் திரைப்படங்கள் அனைத்தும் பெரும் சரிவை சந்தித்து வருகின்றன. திடீரென இப்படி ஒரு தொடர் தோல்வியை சந்திக்காக பாலிவுட் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் தோல்விக்கான காரணத்தை ஆராய்ந்து வருகின்றனர்.
அனுபம் கெர்
இந்நிலையில், ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த அனுபம் கெரிடம் பாலிவுட் படங்களின் தொடர் தோல்விக்கான காரணம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், தென்னிந்திய திரைப்படங்களில் கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. அங்கு கதை தான் ஹீரோ, ஆனால், பாலிவுட் படங்களில் ஹீரோவுக்கு முக்கியத்துவத்தை கொடுத்து அவரை சுற்றியை படத்தை எடுக்கிறார்கள் என்றார்.
சினிமா வியாபாரம் இல்லை
மேலும், சினிமாவை வியாபாரமாக மட்டுமே பார்க்கப்படுவதால் வரும் பிரச்சனை தான் இது. நீங்கள் ரசிகர்களுக்காக படம் எடுக்குறீர்கள் என்றால், நீங்கள் எடுக்கும் படம் ரசிகர்களை திருப்திப்படுத்த வேண்டும். அதுமட்டும் இல்லாமல் மக்கள் பார்க்கும் வகையில் ஏதாவது ஒரு சர்ச்சையை உருவாக்க வேண்டும் என்று நினைத்து படம் குறித்து ஏதாவது ஒரு சர்ச்சையை கிளப்பிவிடுகிறார்கள்.
பாய்காட் சர்ச்சை
தற்போது பாய்காட் ட்ரெண்டிங்கில் உள்ளது. எல்லோருக்கும் கருத்து சுதந்திரம் உண்டு. ஒரு குறிப்பிட்ட படத்தைப் பார்க்க விரும்பவில்லை என்று சிலர் நினைத்தால் அது அவர்களின் உரிமை. ஒரு படம் நன்றாக இருந்தால், பார்வையாளர்கள் அதை ரசித்துபார்ப்பார்கள், நன்றாக இருந்தும் பாய்காட் யாரும் திரையரங்குக்கு வரவில்லை என்று கூறமுடியாது என்றார்.
பல படங்களில்
அனுபம் கெர் சமீபத்தில் நிகில் சித்தார்த்தாவின் கார்த்திகேயா 2 படத்தில் கேமியோ ரோலில் நடித்திருந்தார். தமிழ் திரைப்படம் சந்து மொண்டேட்டி எழுதி இயக்கிய ஒரு மர்ம சாகசப் படத்திலும். சூரஜ் பர்ஜாத்யாவின் ஊஞ்சாய் படத்திலும் நடித்துள்ளார். இப்படத்தில், அமிதாப் பச்சன், போமன் இரானி மற்றும் பரினீதி சோப்ரா ஆகியோரும் நடித்துள்ளனர். கங்கனா ரனாவத்தின் எமர்ஜென்சி படத்தில் ஜெயபிரகாஷ் நாராயணனாகவும் அவர் நடிக்கிறார்.