மெக்சிகோ சிட்டி: கல்லறையில் திடீரென சடலம் கண் அசைந்ததால், திக்குமுக்காடி போய்விட்டனர் குடும்பத்தினர்.. அதற்கு பிறகு என்ன நடந்தது தெரியுமா?
இந்தியாவில் சடலங்களை புதைக்கும்போது, கடைசி நேரத்தில் எத்தனையோ அதிர்ச்சிகரமான சம்பவங்கள் நடந்துள்ளன..
இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு பின்னணியை கொண்டதாக இருந்தாலும், பரபரப்பை நிச்சயம் ஏற்படுத்திவிடும்.
ஆக்ஸிடென்ட்
இதுபோன்ற சம்பவங்கள் வெளிநாடுகளில் நிறைய நிகழும்.. இப்படித்தான் ஒருமுறை, பெரு நாட்டிலும் சம்பவம் நடந்தது.. லம்பெகியூ பகுதியை சேர்ந்தவர் ரோசா இசபெல் சிஸ்பெடி காலஹா.. ரோசாவுக்கு 36 வயதாகிறது.. கடந்த 26-ம் தேதி இவரது கார் விபத்துக்குள்ளாகியது.. காரில் இருந்தவர்கள் அனைவரும் படுகாயமடைந்து சிகிச்சைக்காகவும் அனுமதிக்கப்பட்டனர்.. அப்போது ரோசாவும் இன்னொரு நபரும் இறந்துவிட்டதாக பரிசோதித்து பார்த்த டாக்டர்கள் சொல்லிவிட்டார்கள்.
கல்லறை + சவப்பெட்டி
இதனால் 2 பேருக்கும் இறுதி சடங்கு செய்ய முடிவானது.. அதற்காக சவப்பெட்டியை தயார் செய்து, அதில் ரோசா சடலத்தையும் தூக்கி வைத்தனர்.. பிறகு, சவப்பெட்டியை மூடி, கல்லறைக்கு கொண்டு வந்தனர்.. அடக்கம் செய்யலாம் என்று சவப்பெட்டியை திறக்க முயன்றபோது, சவப்பெட்டி திடீரென அசைந்தது.. இதனால் அதிர்ந்து போன உறவினர்கள், சவப்பெட்டியை திறந்து பார்த்தபோது, ரோசா டக்கென கண்விழித்துள்ளார்..
ரோசா + சடலம்
இதனால் உறவினர்கள் உச்சக்கட்ட ஆத்திரம் அடைந்தனர்.. முதலிலேயே ஒழுங்காக பரிசோதித்து சிகிச்சை தந்திருந்தால், ஒரு உயிர் அநியாயமாக பறி போயிருக்காதே என்று கொந்தளித்து அந்த டாக்டருக்கு எதிராக போராட்டம் நடத்தினர். உண்மையிலேயே அப்போது ரோசா கோமாவில் இருந்துள்ளார்.. அப்போது அவருக்கு உயிர் இருந்துள்ளது.. மறுபடியும் ரோசாவின் சடலத்தை அதே இடத்தில் கொண்டு போய் அடக்கம் செய்தனர் உறவினர்கள்..!
பதற்றம்
அதுபோலவே இன்னொரு சம்பவம் மெக்சிகோவில் நடந்துள்ளது.. அந்த நாட்டை சேர்ந்தவர் காமிலா ரோக்சானா மார்டினேஸ்.. 3 வயது குழந்தை.. கொஞ்ச நாட்களாகவே வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்திருக்கிறாள்.. இதைதவிர, காய்ச்சல், வாந்தி ஏற்பட்டதால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அதே பகுதியில் உள்ள மருத்துவமனையில் கடந்த ஆகஸ்ட் 17ம் தேதி சேர்த்துள்ளனர்… டாக்டர்களும் குழந்தையை பரிசோதித்துவிட்டு, மாத்திரைகள் தந்துள்ளனர்.. ஆனாலும், காமிலாவுக்கு உடல் நிலை மோசமடைந்ததோடு, கொஞ்ச நேரத்தில் சுயநினைவும் இழந்துவிட்டதாக கூறப்படுகிறது.
ஐசியூ
இதனால் அதிர்ச்சி அடைந்த டாக்டர்கள் உடனடியாக, ஐசியூவில் சேர்த்துள்ளனர்.. ஆனால், அடுத்த சில மணி நேரத்தில், காமிலா உயிரிழந்துவிட்டதாக அவரது பெற்றோரிடம் மருத்துவமனை தெரிவித்துள்ளது… இதையடுத்து, இறுதிச்சடங்கு நடந்துள்ளது.. காமிலாவின் உடலை சவப்பெட்டியில் வைத்து இறுதிச் சடங்கு நடந்து கொண்டிருந்தது.. அந்தநேரம் யாரும் எதிர்பாராதவகையில், காமிலாவின் கண்களில் திடீரென அசைவு தென்பட்டதை கண்டு அதிர்ந்தனர்..
போஸ்ட் மார்ட்டம்
பிறகு, காமிலா உயிருடன் இருப்பதை அறிந்து, இறுதிசடங்கில் வந்திருந்தவர்கள் மகிழ்ச்சியுடன் ஆரவாரம் செய்துள்ளனர். குழந்தை இன்னும் சாகவில்லை, டாக்டரை கூப்பிடுங்க, எல்லாரும் கொஞ்ச நில்லுங்க, காற்று வரட்டும்’ என்று, அங்கிருந்தவர்கள் கூச்சலிட்டனர்.. காமிலாவின் பெற்றோரோ, பதற்றமாகவும், உயிரே திரும்பி வந்துவிட்டதுபோலவும் இருந்தனர். அவசரம் அவசரமாக மறுபடியு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.. ஆனால், மருத்துவமனையில் காமிலா நிஜமாகவே இறந்துவிட்டாள்..
“ஆப்பு” ஆன்தி வே
இதனால், குடும்பத்தினர் இதயம் வெடித்து கதறி அழுதனர்.. சடலத்தை போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பி வைத்துள்ளனர்.. முதலிலேயே மருத்துவமனை டாக்டர்கள் ஒழுங்காக கவனித்திருந்தால், சிகிச்சை தந்திருந்தால் குழந்தை உயிர்பிழைத்திருப்பாளே என்று கதறி அழுகிறார்கள் பெற்றோர்.. இத்தனைக்கும் ஐசியூவில் இவ்வளவு அஜாக்கிரதையா? என்று அதிர்ந்து போய் கேட்டிகிறார்கள்.. ஆக, அந்த ஆஸ்பத்திரிக்கு “ஆப்பு” ஆன்தி வே-யில் இருப்பதாக தெரிகிறது.