சென்னை; அரசுப் பள்ளிகளில் சிறார் திரைப்படங்கள் ஒளிபரப்ப வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் சிறார் திரைப்படங்கள் திரையிடப்பட்டு, இந்த திரைப்படங்கள் குறித்து சிறப்பாக விமர்சனம் செய்யும் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு வெளிநாடுகளுக்குச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவார்கள் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. இதன்படி, மாதந்தோறும் அரசுப் பள்ளிகளில் சிறார் திரைப்படங்கள் திரையிடும் திட்டத்தை பள்ளிக் கல்வித்துறை ” சிறார் திரைப்பட விழா” என்ற பெயரில் தயாரித்துள்ளது. இதுதொடர்பான புதிய வழிகாட்டுதல்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
சிறார் திரைப்படங்களினால், மாணவர்களின் சிந்தனை, செயல்திறன், மாணவர்களின் செயல்பட்டில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
ஒவ்வொரு மாதமும் சிறார் திரைப்படங்கள் ஒளிபரப்பப்பட வேண்டும்.
இதற்காக ஒவ்வொரு மாதமும் திரையிடப்பட வேண்டிய படங்கள் குறித்த பரிந்துரையை பள்ளிக்கல்வித்துறை அனுப்பும்.
திரைப்படத்துக்கென ஒதுக்கப்பட்ட பாட வேளைகளில் மட்டுமே சிறார் படங்களை திரையிட வேண்டும்
திரைப்படங்களைத் திரையிடும் முன்பும், பின்னரும் அதுகுறித்து மாணவர்களிடம் ஆசிரியர்கள் கலந்துரையாட வேண்டும்.
திரைப்படம் முடிந்தபின்பு அதுகுறித்த விமர்சனத்தை மாணவ, மாணவிகள் எழுதித் தர வேண்டும்
பள்ளிகள் சிறப்பான இடம்பிடிக்கும் மாணவர்களுக்கு மாவட்ட, மாநில அளவில் வாய்ப்பு வழங்கப்படும்.
இதில் சிறப்பாக விளங்கும் மாணவர்கள் வெளிநாடுகளுக்குக் கல்வி சுற்றுலாவும் அழைத்துச் செல்லப்படுவார்கள்.
உள்பட பல்வேறு வழிகாட்டுதல்களை வெளியிட்டு உள்ளது.