ஐடி ஊழியர்களுக்கு இது எச்சரிக்கையா.. ஐடி துறையில் நடப்பது என்ன?

இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்களும் சமீபத்திய காலமாக தங்களது பே, போனஸ் அறிவிப்பு, வேரியபிள் பே, புதிய பணியாளர் அறிவிப்பு உள்ளிட்டவற்றை குறைக்க தொடங்கியுள்ளன.

இது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் நிலவி வரும் ரெசசன் அச்சத்தின் மத்தியில், அங்கு ஐடி செலவினங்கள் குறைக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

இதன் காரணமாக இந்திய நிறுவனங்கள் பெரியளவில் பிரச்சனையை எதிர்கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சரிவில் தள்ளாடும் அமெரிக்க பொருளாதாரம்.. 2 காலாண்டாக மைனஸ்.. அப்போ ரெசிஷன் உறுதியா..?

கொரோனா காலம்

கொரோனா காலம்

கொரோனா காலகட்டத்தில் லாக்டவுன் மத்தியில் பல்வேறு துறைகளும் பிரச்சனையை எதிர்கொண்ட நிலையில், ஐடி துறை மட்டும் வழக்கத்துக்கு மாறாக ஏற்றம் காணத் தொடங்கியுள்ளது. இதனால் அந்த காலகட்டத்தில் ஊழியர்களுக்கு சம்பளத்தினை வாரி வழங்க தொடங்கின. அந்த காலக்கட்டத்தில் அட்ரிஷன் விகிதமும் அதிகமாக இருந்ததால், ஊழியர்களை தக்க வைக்க பல சலுகைகளை வாரி வழங்கின.

வேரியபிள் பே கட்

வேரியபிள் பே கட்

இந்த நிலையில் நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே தேவை சரியலாம் என்ற அச்சத்தின் மத்தியில் புதிய பணியமர்த்தலையும் குறைத்துள்ளன. ஏற்கனவே அறிவித்த சலுகைகளையும் நிறுத்தியுள்ளன. இந்தியாவின் இரண்டாவது பெரிய ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸ், விப்ரோ உள்ளிட்ட நிறுவனங்கள் தங்களது வேரியபிள் பேவினை குறைத்துள்ளன.

செயல்திறனுக்கு ஏற்ப சம்பளம்
 

செயல்திறனுக்கு ஏற்ப சம்பளம்

சில இந்திய நிறுவனங்கள் ஊழியர்களின் சம்பளத்தினை அவர்களின் செயல்திறனுடன் இணைக்கின்றன. இது உலகளாவிய மந்த நிலைக்கு மத்தியில் இப்படி, பல அதிரடி அறிவிப்புகள் கடந்த சில வாரங்களாகவே வெளியாக தொடங்கியுள்ளன.

இது ஊழியர்களுக்கு கவலையளிக்கும் விஷயமாக இருந்தாலும், ஊழியர்கள் கவனமாக செயல்பட வேண்டும் என்பதையும் சுட்டிக் காட்டியுள்ளது.

அதிக சம்பளம்

அதிக சம்பளம்

ஏனெனில் நிறுவனங்கள் அவர்களின் செலவினங்களை கண்கானிக்க தொடங்கலாம். ஏற்கனவே பல நிறுவனங்களும் கண்கானித்து வருகின்றன.

இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்கள் கிளவுட் கம்ப்யூட்டிங், டிஜிட்டல் பேமெண்ட், உள்கட்டமைப்பு, சைபர் செக்யூரிட்டி மற்றும் கிரிப்டோகரன்சி பரிவர்த்தனைகள் அதிகரித்துள்ளதால், திறமையான ஊழியர்களுக்கு அதிகம் சம்பளம் கொடுத்து தக்க வைத்துக் கொண்டன.

செலவு 80% வரை அதிகரிப்பு

செலவு 80% வரை அதிகரிப்பு

ஆக அவர்கள் தற்போது செலவினை குறைக்க இது போன்ற நடவடிக்கைகளை எடுக்கலாம். ஐடி நிறுவனங்கள் கடந்த இரண்டு ஆண்டுகளில் அதிக உழியர்களை ஈர்க்கவும், தக்க வைத்துக் கொள்ளவும், 2 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட 60 – 80% அதிகம் செலவழித்துள்ளன. இதனால் ஐடி நிறுவனங்களுக்குள் திறமைக்கான போர் இருந்தது. இது மேற்கொண்டு அவர்களின் செலவினங்களை அதிகரித்தது.

மார்ஜினில் தாக்கம்

மார்ஜினில் தாக்கம்

எனினும் நடப்பு ஆண்டில் நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில் நிறுவனங்கள் மார்ஜினில் தாக்கத்தினை எதிர்கொண்டுள்ளன. கட ந்த ஜூன் காலாண்டில் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் மார்ஜின் விகிதம் 3.6% குறைந்து, 20.1% ஆகவும், விப்ரோவின் மார்ஜின் விகிதம் 15% ஆகவும் குறைந்துள்ளது. இது முன்னதாக 18.8% ஆகவும் இருந்தது.

கவனமுடன் செயல்பட வேண்டும்

கவனமுடன் செயல்பட வேண்டும்

ஐடி நிறுவனங்கள் வளர்ச்சியானது மெதுவாக தொடங்கியுள்ள காரணத்தினால், இதுபோன்ற நடவடிக்கைகளைகள் இருக்கலாம். இதன் காரணமாக திறன், செயல்பாட்டின் அடிப்படையில் சில நடவடிக்களை எடுக்கலாம். ஆக ஊழியர்கள் கவனமுடன் அதற்கேற்பட செயல்படுவது நல்லது. எனினும் இது தற்காலிகமானதாக இருக்கலாம். நீண்டகாலத்தில் தேவைகள் வலுவாகவே உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Warning signs! why It companies cut bonuses for employees, fresher hiring?

Warning signs! why It companies cut bonuses for employees, fresher hiring?/ஐடி ஊழியர்களுக்கு இது எச்சரிக்கையா.. ஐடி துறையில் நடத்து தான் என்ன?

Story first published: Friday, August 26, 2022, 13:49 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.