வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
டெக்சாஸ்: அமெரிக்காவில் பெண் ஒருவர் இந்திய பெண்களிடம் இனவெறியுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தாக்கிவிட்டு, இந்தியர்களை நாட்டை விட்டு போகுமாறும் சத்தம் போட்டுள்ளார். அவரை போலீசார் கைது செய்தனர்.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள டல்லாஸ் நகரத்தில் நான்கு இந்தியப் பெண்களை மெக்சிகோ அமெரிக்கப் பெண் இனரீதியாக வசைப்பாடி, தாக்குதலிலும் ஈடுபட்டுள்ளார். இந்திய பெண்கள் நால்வரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அப்பெண், ‛இந்தியர்களாகிய உங்களைப் பார்த்தால் எனக்கு வெறுப்பாக இருக்கிறது. வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திக் கொள்ள இந்தியர்கள் எல்லோரும் அமெரிக்காவுக்கு வந்துவிடுகின்றனர்.
நான் எங்கு சென்றாலும் இந்தியர்கள் இருக்கின்றனர். உங்கள் இந்தியாவில் வாழ்வது சிறப்பானது என்றால் ஏன் நீங்கள் எல்லோரும் இங்கே வருகிறீர்கள். நீங்கள் எல்லோரும் இந்தியாவுக்கே திரும்பிப் போங்கள்’ என்கிறார். அவருடைய பேச்சுக்கிடையே சில ஆபாச வார்த்தைகளையும் பயன்படுத்துகிறார். இனவெறியுடன் பேசியது மட்டுமல்லாமல், இந்திய பெண்கள் மீது தாக்குதலிலும் ஈடுபடுகிறார்.
இதனையெல்லாம் நால்வரில் ஒரு பெண் வீடியோவாக பதிவும் செய்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், அப்பெண் டெக்சாஸ் நகரின் பிளேனோ பகுதியை சேர்ந்த எஸ்மெரால்டா அப்டன் என்பது தெரியவந்தது. அவர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement