கொச்சி : வரும் ஆகஸ்ட் 31ம் தேதி விக்ரமின் கோப்ரா மற்றும் பா ரஞ்சித்தின் நட்சத்திரம் நகர்கிறது படங்கள் ரிலீசாக உள்ளன.
இந்தப் படங்கள் பான் இந்தியா படங்களாக ரிலீசாக உள்ளதால் மற்ற மாநிலங்களிலும் பிரமோஷன்கள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் இன்றைய தினம் இந்தப் படங்களின் பிரமோஷன்கள் கேரளாவில் நடைபெறவுள்ளன.
பான் இந்தியா படங்கள்
தற்போது ஏறக்குறை அனைத்துப் படங்களும் இந்திய அளவில் பான் இந்தியா படங்களாக வெளியாகி வருகின்றன. இந்தி, மலையாளம் போனற் மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகும் இத்தகைய படங்களில் புதிய முயற்சிகள் மற்றும் ஆக்ஷன் படங்களுக்கு சிறப்பான வரவேற்பு காணப்படுகின்றன.
கேரளாவில் மிரட்டிய விக்ரம் வசூல்
அந்த வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான கமல்ஹாசனின் விக்ரம் படம் டெல்லி மற்றும் கேரள மாநிலங்களில் சிறப்பான வரவேற்பை பெற்றன. குறிப்பாக கேரளாவில் இந்தப் படம் அதிகமான கோடிகளை வசூலித்தது. படத்தில் பகத் பாசிலுக்கு அதிகமான காட்சிகள் இருந்ததும் இதற்கு காரணம்.
ஆக்ஷன் படங்களுக்கு வரவேற்பு
கேரளாவில் சிறப்பான கதைக்களங்கள் படங்கள் வெளியானாலும் ஆக்ஷன் படங்கள் அங்கு குறைவு. அதனாலேயே அங்கு தமிழ் ஹீரோக்களில் விஜய் உள்ளிட்டவர்கள் படங்கள் ரிலீசானால் ரசிகர்கள் மிகப்பெரிய கொண்டாட்டங்களில் ஈடுபடுகின்றனர். இதுகுறித்து சமீபத்தில் நடிகர் பிரித்விராஜ்கூட ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
கேரளாவில் தமிழ்ப்படங்கள்
இந்நிலையில் கேரளாவை குறி வைத்து தமிழ்ப்படங்கள் அதிகமாக ரிலீஸ் செய்யப்பட்டு வருகின்றன. படத்தின் ரிலீசுக்கு முன்னதாக சிறப்பான பிரமோஷன்களும் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இன்னும் சில தினங்களில் வெளியாகவுள்ள விக்ரமின் கோப்ரா மற்றும் இயக்குநர் பா ரஞ்சித்தின் நட்சத்திரம் நகர்கிறது ஆகிய படங்கள் கேரளாவில் வெளியாகவுள்ளன.
கேரளாவில் கோப்ரா -நட்சத்திரம் நகர்கிறது டீம்
இதையடுத்து இன்றைய தினம் இந்த இரண்டு படக்குழுவினரும் கேரளாவில் முகாமிட்டுள்ளனர். அங்கு இன்றைய தினம் இந்தப் படங்களுக்கான பிரமோஷன்கள் சிறப்பாக திட்டமிடப்பட்டுள்ளன. விமானநிலையத்தில் விக்ரம் உள்ளிட்ட கோப்ரா படக்குழுவினரை பார்க்க முடிந்தது.
சிறப்பான மாஸ் வரவேற்பு
நம்முடைய தமிழ் படங்கள் மற்ற மாநிலங்களில் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுவருவது சிறப்பாக பார்க்கப்படுகிறது. இதன்மூலம் தமிழ் சினிமாவை அடுத்தக்கட்டத்திற்கு நகர்த்த முடியும். குறிப்பாக நமது அண்டை மாநிலமான கேரளாவில் தமிழ் படங்களுக்கு மாஸான வரவேற்பு காணப்படுவது சிறப்பானது.