புதுச்சேரி: புதுச்சேரி பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட இலவச திட்டங்கள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். மருத்துவ காப்பீடு திட்டம் முழுமையாக அனைவருக்கும் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறியுள்ளார். மேலும் திட்டங்களை செயல்படுத்துவதில் காலதாமதம் ஆகிறது என்பது ஒப்புக்கொள்ள வேண்டிய விஷயம் தான் என புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி கூறியுள்ளார்.