BWF World Championship 2022, Badminton Highlights in tamil: 27-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது. இதில் இன்று நடந்த ஆண்கள் இரட்டையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி இணை களமாடினர். உலக சாம்பியன்களான ஜப்பானின் டகுரோ ஹோக்கி மற்றும் யூகோ கோபயாஷியை எதிகொண்ட இந்த ஜோடி, அவர்களை 24-22, 15-21, 21-14 என்ற செட் கணக்கில் வீழ்த்தி, அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினர்.
இந்த அசத்தல் வெற்றியின் மூலம் சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி இணை இந்திய அணிக்கான பதக்கத்தை உறுதிசெய்துள்ளது. மேலும், உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் முதல் முறையாக பதக்கம் வென்ற இந்திய ஆடவர் இரட்டையர் ஜோடி என்ற பெருமையை சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி பெற்றுள்ளனர்.
✅ First 🇮🇳 MD pair to secure a #BWFWorldChampionships medal
✅ Only 2nd #WorldChampionships medal from 🇮🇳 doubles pair
✅ 13th medal for 🇮🇳 at World’s@satwiksairaj & @Shettychirag04 script history yet again 😍#BWFWorldChampionships2022#BWC2022#Tokyo2022#IndiaontheRise pic.twitter.com/POW0uYt7KC
— BAI Media (@BAI_Media) August 26, 2022
கடந்த 2011 ஆம் ஆண்டு நடந்த உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் பெண்கள் இரட்டையர் ஜோடி பிரிவில் ஜ்வாலா குட்டா மற்றும் அஷ்வினி பொன்னப்பா ஆகியோர் முதல் முறையாக பதக்கம் வென்று அசத்தி இருந்தனர்.
மற்றொரு ஆண்கள் இரட்டையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில், இந்தோனேசியாவின் ஹென்ட்ரா செட்டிவா மற்றும் முகமது அஹ்சன் ஜோடியை எதிர்த்து களம் கண்ட இந்தியாவின் எம் ஆர் அர்ஜுன் மற்றும் துருவ் கபிலா இணை, 8-21, 14-21 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தது.
முன்னதாக இந்த ஜோடி எட்டாம் நிலை வீரரான கிம் அஸ்ட்ரூப் மற்றும் டென்மார்க்கின் ஆண்டர்ஸ் ஸ்காரப் ராஸ்முசெனை இரண்டாவது சுற்றில் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil