சர்வதேச நாடுகள் பலவும் நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில் வளர்ச்சியில் தாக்கத்தினை எதிர்கொண்டுள்ளன. குறிப்பாக சர்வதேச அளவில் முன்னணி பொருளாதார நாடுகளான சீனா, அமெரிக்காகவும் கூட மெதுவான வளர்ச்சியினை காணத் தொடங்கியுள்ளன.
குறிப்பாக சீனாவின் வளர்ச்சி விகிதம் இரண்டாவது காலாண்டில் வெறும் 0.4% மட்டுமே வளர்ச்சி கண்டுள்ளது.
இதே அமெரிக்காவின் வளர்ச்சி விகிதமானது இரண்டாவது காலாண்டு வளர்ச்சி விகிதமானது -0.6% சரிவினைக் கண்டுள்ளது.
Cyber Attack: வெறும் 3 மாதத்தில் 18 மில்லியன் சைபர் தாக்குதல்கள்..!
சீனாவில் தாக்கம்
இன்று நாம் பார்க்கவிருப்பது சீனாவின் வளர்ச்சி விகிதம் குறைந்தால், அதனால் இந்தியாவுக்கு பிரச்சனையா? இந்தியாவில் எந்த மாதிரியான பாதிப்புகள் இருக்கலாம். கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன? என்பதைத் தான் பார்க்க இருக்கிறோம்.
சீனாவின் பொருளாதார வளர்ச்சி விகிதமானது ஜீரோ கோவிட் பாலிசி காரணமாக பெரும் தாக்கத்தினை எதிர்கொண்டுள்ளது. கொரோனா மட்டும் அல்ல, சீனாவின் ரியல் எஸ்டேட் துறையில் நிலவி வரும் பிரச்சனை, அதன் பொருளதார வளர்ச்சியில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது.
விலை அதிகரிக்கலாம்?
இது சர்வதேச அளவில் பணவீக்கத்தினை உயர்த்த வழிவகுக்கலாம் என்ற அச்சமும் எழுந்துள்ளது. குறிப்பாக உற்பத்தி சார்ந்த பொருட்களின் விலையானது அதிகரிக்கலாமென்ற அச்சமும் எழுந்துள்ளது. இது சர்வதேச அளவில் பல கமாடிட்டிகளின் விலையில் அழுத்தத்தினை ஏற்படுத்தலாம்.
இந்தியாவுக்கு பாதிப்பு தான்
குறிப்பாக சீனாவின் இந்த மெதுவான வளர்ச்சி விகிதமானது, சீனாவின் அண்டை நாடான இந்தியாவில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. சீனாவின் மந்த நிலைக்கு மத்தியில் அங்கு தேவையானது சரிவினைக் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்றும் சீனாவிற்கு முக்கிய இறக்குமதியாளராக இந்தியா இருந்து வருகின்றது. ஆக சீனாவில் ஏற்படும் தாக்கத்தினால் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி குறையலாம். இது நேரடியாக இந்திய ஏற்றுமதி நிறுவனங்களை பாதிக்கலாம்.
மிகப்பெரிய ஏற்றுமதியாளர்
கடந்த 2016ம் ஆண்டுக்கு பிறகு தொடர்ந்து இந்தியாவில் இருந்தி சீனாவிற்கு ஆண்டுக்கு ஆண்டு ஏற்றுமதி விகிதமானது தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளது. கடந்த 2021ல் கடந்த 10 ஆண்டுளில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய அளவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக கல்வான் பள்ளதாக்கில் ஏற்பட்ட பிரச்சனைக்கு பிறகு, சீனா வேண்டாம் என்ற கோஷங்கள் எழுந்தன. ஆனால் அந்த காலக்கட்டத்தில் கூட வணிகத்தில் எந்த தாக்கம் ஏற்படவில்லை.
இறக்குமதியாளர்
இந்தியா செய்யும் ஏற்றுமதியினை விட, இறக்குமதி அதிகம். இதனால் ஏற்கனவே இந்தியாவுக்கு சீனாவுக்கும் இடையே வர்த்தக பற்றாக்குறை என்பது மிக அதிகமாக உள்ளது. இந்த நிலையில் சீனாவின் இறக்குமதி குறைந்தால் இன்னும் வர்த்தக பற்றாக்குறையானது அதிகரிக்கலாம். இது மேற்கோண்டு இந்தியாவின் வளர்ச்சியில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.
இதுவும் பாதிப்பு தான்?
குறிப்பாக சீனாவில் இருந்து மின்சாதனங்கள், மெஷினரி, மெஷினரி உதிரி பாகங்கள், கெமிக்கல்கள், உரங்கள், பிளாஸ்டிக், மருத்துவ மூலப்பொருட்கள் என பல முக்கிய பொருட்களும் இறக்குமதி செய்யப்படுகின்றன. ஆக சீனாவின் இறக்குமதி பாதித்தால் அதுவும் இந்தியாவில் தாக்கத்தினை ஏற்படுத்த கூடும். மொத்தத்தில் சீனாவின் வளர்ச்சி குறைந்தால், அதனால் நிச்சயம் இந்தியாவிலும் தாக்கம் இருக்கலாம்.
Will China’s slow growth affect India? How?
Will China’s slow growth affect India? How?/சீனாவினால் இந்தியாவுக்கு இப்படியும் பிரச்சனை ஏற்படலாம்.. எச்சரிக்கும் நிபுணர்கள்!