ஏற்கனவே வந்த ரெட்மி நிறுவனத்தின் தயாரிப்பான Redmi Note 10S ஐ ஒத்தது போலவே வெளியாக இருக்கும் Redmi Note 11 SE இன்று அதிகாரபூர்வமாக வெளியிடப்படுவதாக அந்நிறுவனத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பயனாளர்கள் 31ஆம் தேதியில் இருந்த ஆன்லைன் வர்த்தக தளமான பிளிப்கார்ட் மூலமாக ஆர்டர் செய்து பெற்றுக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்த மொபைலில் இடம்பெற்றுள்ள சிறப்பம்சங்கள் என்னவெல்லாம் என்றும் நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ளது.
MediaTek Helio G95 ப்ராசஸர் பயன்படுத்தப் பட்டுள்ளது.6.43இன்ச் FHD + AMOLED டிஸ்பிளே64MP க்வாட் கேமரா + 8MP அல்ட்ரா வைட் + 2MP மேக்ரோ கேமரா+ 2MP டெப்த் சென்சார்13MP முன்பக்க கேமரா5000 mAh பேட்டரி திறன் மற்றும் 33w வேகமான சார்ஜிங் வசதிதண்டர் பர்ப்பில் , காஸ்மிக் வெள்ளை, ஸ்பேஸ் ப்ளாக் , பிஃப்ரோஸ்ட் நீலம் ஆகிய நான்கு நிறங்களில் வெளியாகிறது.இரண்டு ஸ்டீரியோ ஸ்பீக்கர் வசதி6GB LPDDR4X ரேம் மற்றும் 64GB UFS 2.2 ரோம்ஒரு இன்ச்சுக்கு 409 பிக்சல் இருக்கும் என கூறப்பட்டுள்ளது.
முன்பே சொன்னது போல் இதன் முந்தைய தயாரிப்பான Redmi Note 10S ஒத்தது போலவே இதுவும் இருப்பதால் இதன் விலையும் கிட்டத்தட்ட அதை போலத்தான் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது Redmi Note 10Sஇன் விலை 6GB+ 64GB வேரியண்ட் 12,999 ரூபாய்க்கும், 6GB+ 128GB வேரியண்ட் 14,999 ரூபாய்க்கும், 8GB+ 128GB வேரியண்ட் 16,498க்கும் விற்பனை ஆகி வருகிறது.
எனவே தற்போது வெளியாக இருக்கும் Redmi Note 11 SE இன் விலை 12,000திலிருந்து 13,000த்திற்குள் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ரெட்மி நிறுவனம் அதிகாரபூர்வமாக விலை குறித்து எந்த தகவலையும் வெளியிடவில்லை.
– சுபாஷ் சந்திரபோஸ்