இயக்குநர் பா. இரஞ்சித் காதல் களத்தை தேர்ந்தெடுத்து நட்சத்திரம் நகர்கிறது என்று முழுக்க முழுக்க காதல் படத்தை இயக்கி முடித்திருக்கிறார். இதில் ஜெயராமின் மகன் காளிதாஸ் ஜெயராம், சார்பட்டா பரம்பரையில் கதாநாயகியாக நடித்த துஷாரா விஜயன், டான்சிங் ரோஸாக நடித்த ஷபீர் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். வழக்கமாக பணியாற்றும் குழுவோடு இல்லாமல் புதிய தொழில்நுட்ப குழுவோடு களமிறங்கியிருக்கிறார் பா.இரஞ்சித். இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு பன்மடங்கு அதிகரித்துள்ளது.
படத்தில் இடம்பெற்றிருக்கும் ரங்கராட்டினம் என்ற சிங்கிள் பாடல் சமீபத்தில் வெளியானது. அதேபோல் ட்ரெய்லரும் வெளியாகி பரவலான கவனத்தை பெற்றிருக்கிறது. படமானது ஆகஸ்ட் 31ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. நட்சத்திரம் நகர்கிறது படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடந்தது. இதில் இரஞ்சித் உள்ளிட்ட படக்குழுவினர் மற்றும் திரை பிரபலங்கள் கலந்துகொண்டனர். விழாவில் இரஞ்சித் தனது தாயாரை மேடைக்கு அழைத்து கௌரவப்படுத்தினார்.
படம் வெளியாவதற்கு இன்னும் 5 நாள்கள் மட்டுமே இருப்பதால் படத்துக்கான ப்ரோமோஷன் பணிகள் வேகமெடுத்துள்ளன. அதன்படி இயக்குநர் இரஞ்சித் மற்றும் படக்குழுவினர் இன்று கேரளா சென்று படத்துக்கான ப்ரோமோஷனில் கலந்துகொண்டனர்.
இந்நிலையில், “நட்சத்திரம் நகர்கிறது” திரைப்படத்திற்கு தணிக்கைக் குழு ‘ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இதற்கிடையே, படத்தில் குறிப்பிட்ட சாதி குறித்த வசனங்கள் இருப்பதால் படத்துக்கு சென்சார் கிடைப்பதில் சிக்கல் என தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.
Love gets an A certificate.#NatchathiramNagargiradhu – Certified
ICYMI, catch the trailer here https://t.co/m0jUjcalVm@beemji @officialneelam @vigsun @Manojjahson @tenmamakesmusic @kishorkumardop @EditorSelva @anthoruban @Jayaraguart @iamSandy_Off @STUNNER_SAM pic.twitter.com/tDWocZv1um
— Yaazhi Films (@YaazhiFilms_) August 26, 2022
இந்தப் படத்துக்கு அடுத்ததாக பா.இரஞ்சித் விக்ரமை வைத்து படம் இயக்கவிருக்கிறார். இது கோலார் தங்க சுரங்கம் பற்றிய கதை என கூறப்படுகிறது.