\"பெட் ரூம்\" வரை நீளும் உளவு பார்வை! சொந்த மகளையே உளவு பார்க்கும் புதின்.. என்ன காரணம் தெரியுமா

மாஸ்கோ: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மகள் கேடரினா டிகோனோவா குறித்து சில முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது.

கடந்த 2017ஆம் ஆண்டு முதல் ரஷ்யாவின் அதிபராக விளாடிமிர் புதின் உள்ளார். உலகின் சக்திவாய்ந்த தலைவர்களில் ஒருவரான புதின் தனது குடும்பத்தினர் குறித்த தகவல்களைப் பல ஆண்டுகள் ரகசியமாகவே வைத்து வந்தார்.

மேற்குலக நாடுகளுக்கும் புதினுக்கும் எப்போதுமே ஆகாது. இதனால் பாதுகாப்பு கருதியே புதின் தனது குடும்பத்தினர் குறித்த தகவல்களை ரகசியமாகவே வைத்து வந்தார்.

ரஷ்யா

புதினின் இரண்டாவது மகள் கேடரினா டிகோனோவா. 35 வயதான இவர் 53 வயதான இகோர் ஜெலென்ஸ்கி என்பவரைக் காதலித்து வருகிறார். கடந்த நான்கு ஆண்டுகளாகவே இவர்கள் தொடர்ச்சியாக ஜெர்மனி, பிரிட்டன் என பல்வேறு இடங்களுக்கும் சென்றுள்ளார். ஒவ்வொரு முறையும் கேடரினா டிகோனோவா தனது காதலன் உடன் வெளிநாடுகளுக்குச் செல்லும் போதும், அவருக்குப் பின்னாலேயே உளவாளிகளையும் அனுப்புவாராம் புதின்!

 ரஷ்ய வரிப்பணம்

ரஷ்ய வரிப்பணம்

இது தொடர்பாக சில ரகசியத் தகவல்களைச் சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. அதாவது ஒவ்வொரு முறையும் கேடரினா டிகோனோவா காதலனுடன் ரொமான்டிக் டிரிப் செல்லும் போதும், அவர்கள் உடன் ரஷ்ய வரிப்பணத்தில் சிறப்புச் சேவை அதிகாரிகள் படையும் உளவாளிகளும் உடன் செல்வார்கள். இப்படித்தான் கடந்த 2017இல் அவர் லண்டன் சென்றிருந்த போது, டாப் உளவாளிகள் ஆறு பேர் அவர்களுக்கு அருகிலேயே 3 அறைகளில் தங்கி உள்ளனர்.

 உளவாளிகள்

உளவாளிகள்

அதேநேரம் அவர் காதலுடன் லண்டனில் எங்கெல்லாம் சென்றார் என்பது குறித்த தகவல்கள் சேகரிக்கப்படவில்லை. மற்றொரு சமயம் இப்படித்தான் சுவீடன் நாட்டிற்கு கேடரினா டிகோனோவா சென்ற போது, அவருடன் சுமார் 10 டாப் உளவாளிகள் உடன் சென்று உள்ளனர். குறிப்பாக அதில் இரண்டு பேர் புதினின் மகளின் பாதுகாப்பைத் தனிப்பட்ட முறையில் உறுதி செய்ய அவருடனேயே பயணித்து உள்ளனர்.

 டிகோனோவா

டிகோனோவா

ரஷ்யாவின் செல்ல மகளான டிகோனோவா நடனத்தில் தீவிர ஈடுபாடு கொண்டவர். அவருக்கு முதலில் ரஷ்யாவின் கோடீஸ்வரரும் புதினின் நெருங்கிய நண்பருமான கிரில் ஷமலோவ் (40) என்பவருடன் திருமணம் நடந்தது. இருப்பினும், வெறும் 4 ஆண்டுகளிலேயே அவர்கள் திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது. அதன் பின்னர், டிகோனோவா பாலே நட்சத்திரமான இகோர் ஜெலென்ஸ்கி என்பவரைக் காதலிக்கத் தொடங்கினார். இந்தத் தம்பதிக்கு ஒரு குழந்தையும் உள்ளது.

 பெட் ரூம் வரை

பெட் ரூம் வரை

மேற்குலக நாடுகள் அந்நாட்டு மக்களின் வரிப் பணத்தை வீணடிப்பதாக புதின் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வந்தார். இந்தச் சூழலில் சொந்த மகளை உளவு பார்க்க புதினே மக்கள் வரிப்பணத்தைப் பயன்படுத்தி உள்ளது இந்த விசாரணையில் தெரிய வந்துள்ளது. புதினுக்கு அவரது மகளின் புதிய காதல் குறித்து தொடக்கம் முதலே தெரியுமாம். ஏனென்றால் அவர்களின் உளவு காதுகள் பெட் ரூம் வரை தொடருமாம்.

 ஜெர்மனி போலீசார்

ஜெர்மனி போலீசார்

இந்த ரகசிய உளவாளிகளின் செயல்பாடுகளில் சந்தேகம் கொண்ட ஜெர்மனி போலீசார், ஒரு கட்டத்தில் அவர்களே பின் தொடர தொடங்கியதாகவும் அதில் கூறப்பட்டு உள்ளது. ரஷ்ய அதிபர் புதினின் குடும்பத்தினர் பலரும் வெளிநாடுகளில் வாழும் நிலையில், அவர்களுக்கு எந்தளவுக்கு நிதி செலவிடப்படுகிறது என்பதை இதில் இருந்து தெரிந்து கொள்ளலாம் என்று மேற்குலக நாடுகளைச் சேர்ந்த பாதுகாப்பு வல்லுநர்கள் விமர்சித்துள்ளனர்.

Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.