தைவான் சீனா இடையேயான பதற்றத்திற்கு மத்தியில், தைவான் அரசு அதன் பாதுகாப்பு துறைக்கான செலவினத்தினை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.
அடுத்த ஆண்டில் பாதுகாப்பு துறைக்கு மட்டும் 19 பில்லியன் டாலர் செலவழிக்க திட்டமிட்டுள்ளது. இது முந்தைய நிதி ஒதுக்கீடுகளை காட்டிலும் இரு இலக்கில் அதிகரித்துள்ளது.
இது தைவானை சுற்றி சீனாவான் தனது போர் பயிற்சியினை தொடங்கிய நிலையில், தைவான் அரசும் இப்படி ஒரு முடிவினை எடுத்துள்ளது.
இந்தியா பக்கம் திரும்பும் தைவான்.. கடுப்பான சீனா..?!
பாதுகாப்பு துறைக்கு கூடுதல் நிதி
இதில் புதிய போர் விமானங்களுக்கான நிதி உள்ளடக்கிய இரட்டை இலக்க அதிகரிப்பு செய்யப்பட்டுள்ளது. இது தைவானின் பாதுகாப்பு துறையை இன்னும் மேம்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவின் நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி, ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் தைவானில் அரசு முறை பயணம் மேற்கொண்டார். அவரின் பயணம் அறிவிக்கப்பட்டது முதல் கொண்டே, சீன அரசு எதிர்ப்பு தெரிவித்து வந்தது.
எல்லாத்துக்கும் தயார் தான்
பெலொசியினை வருகைக்கு எதிர்ப்புக்கு தெரிவிக்கும் விதமாக அதி நவீன ஏவுகணையை ஏவி போர் ஒத்திகையிலும் சீனா ஈடுப்பட்டது. எனினும் இதற்கு அசராத தைவான், சீனா போர் தொடுத்தால் அதை எதிர்கொள்ள தயாராக உள்ளோம் என்று தைவான் ராணுவம் பகிரங்கமாகவே அறிவிப்பினை கொடுத்தது.
பாதுகாப்பு துறைக்கு கூடுதல் நிதி
சொன்னதோடு மட்டும் விட்டு விடவில்லை, தற்போது தனது சீனாவின் எதிர்கால பிரச்சனையை எதிர்கொள்ளும் விதமாக, பற்பல நடவடிக்கைகளை எடுக்க தொடங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாகத் தான் ஜனாதிபதி சாய் இங் வெனின் அமைச்சரவையால் முன்மொழியப்பட்ட ஒட்டுமொத்த பாதுகாப்பு துறை சார்ந்த பட்ஜெட், கடந்த ஆண்டினை காட்டிலும் 13.9% அதிகரித்து, 19.41 பில்லியன் டாலராக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
போர் விமானம்+ போர் உபகரணங்கள்
இந்த பட்ஜெட்டில் போர் விமானம் மற்றும் போருக்கு தேவையான முக்கிய கருவிகள் என பலவும் வாங்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இதற்காக சிறப்பு நிதியும் ஒதுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகவுள்ளது.
தைவானின் இந்த பட்ஜெட்டானது ஒரு சாதனை அளவு என்றும் கூறப்படுகின்றது. இந்த பட்ஜெட்டுக்கு பார்லிமெண்டில் ஒப்புதல் கொடுக்க வேண்டும் என்றும், தொடர்ந்து கடந்த ஆறு ஆண்டுகளாகவே பாதுகாப்பு துறைக்கு செலவினங்களை தைவான் அதிகரித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து அதிகரிப்பு
எனினும் நடப்பு ஆண்டில் பரிந்துரை செய்யப்பட்டுள்ள இந்த தொகையானது சமீபத்திய ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது கணிசமான அதிகம். இது குறித்து தைவான் அரசு நாங்கள் எப்போதும் எங்கள் மக்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை கொடுக்க விரும்புகிறோம். அதனால் தான் தொட்ர்ந்து பாதுகாப்பு துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்துள்ளோம்.
ஜிடிபியில் எவ்வளவு?
தைவானின் ஜிடிபியில் 2.4% சமமான பட்ஜெட்டினை பாதுகாப்பு துறைக்கு செலுத்த திட்டமிடப்படுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து கடந்த சில ஆண்டுகளாக சீனா தொடர்ந்து தனது பாதுகாப்பு துறையை விரிவாக்கம் செய்து வருகின்றது. ஆக அதற்கு தன்னை தயார் படுத்திக் கொள்ளும் விதமாக தைவானும் சமீபத்திய ஆண்டுகளாகவே நடவடிக்கையில் இறங்கியுள்ளது. தைவான் கடந்த ஆண்டில் பாதுகாப்பு துறைக்கு 8.69 பில்லியன் டாலர் ஒதுக்கீடு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
சீனாவும் முதலீடு
சீனாவும் தொடர்ந்து தனது பாதுகாப்பு படையினை மேம்படுத்தி வரும் நிலையில், பல புதிய ரக போர் கருவிகளிலும் முதலீடு செய்து வருகின்றது. சீனாவுடன் ஒப்பிடும்போது தைவானின் படை பலம் குறைவாகவே உள்ளது. எனினும் அமெரிக்கா தைவானுக்கு ஆதரவாக களமிறங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆக சீனாவுக்கு பெரும் சிக்கல் தான். அதேசமயம் தைவானும் தொடர்ந்து தனது பலத்தினை அதிகரித்துக் கொண்டே தான் உள்ளது.
Taiwan plans to rise in defence spending amid escalating china issue
Taiwan plans to rise in defence spending amid escalating china issue/தைவானின் மெகா இலக்கு.. சீனாவுக்கு அதிகரிக்கும் டென்ஷன்..!