பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், 21 பல்கலைக்கழகங்களை “போலி” என்று அறிவித்துள்ளது. மற்றும் அந்த பல்கலைக்கழகங்களுக்கு எந்தப் பட்டமும் வழங்க அதிகாரம் இல்லை என்றும் யுஜிசி அறிவித்துள்ளது. கர்நாடகா, மகாராஷ்டிரா, புதுச்சேரி, ஆந்திரா, ஒடிசா, மேற்கு வங்காளம், கேரளா ஆகிய மாநிலங்களில் உள்ள போலி பல்கலைக்கழகங்களின் பட்டியலை யுஜிசி வெளியிட்டுள்ளது.
இதில் கவனிக்க வேண்டியவை என்னவென்றால், பெரும்பாலான போலி பல்கலைக்கழகங்கள் டெல்லியில்தான் உள்ளன என பட்டியலிடப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து உத்தரபிரதேசம் இரண்டாம் இடத்தில் உள்ளது.
இது குறித்து யுஜிசி செயலாளர் ரஜ்னிஷ் ஜெயின் கூறுகையில், “யுஜிசி சட்டத்தை மீறி செயல்படும் குறைந்தபட்சம் 21 சுய, அங்கீகாரம் பெறாத கல்வி நிறுவனங்கள் போலியான பல்கலைக்கழகங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும் இவை எந்த பட்டமும் வழங்க அதிகாரம் இல்லை” என்று தெரிவித்தார்.
டெல்லியில் உள்ள போலி பல்கலைக்கழகங்கள்:
-அகில இந்திய பொது மற்றும் உடல் நல அறிவியல் கல்வி நிறுவனம்
-கமர்ஷியல் யுனிவர்சிட்டி லிமிடெட். தர்யாகஞ்ச்
-ஐக்கிய நாடுகள் பல்கலைக்கழகம்
-தொழிற்கல்வி பல்கலைக்கழகம்
-ADR-சென்ட்ரிக் ஜூரிடிகல் பல்கலைக்கழகம்
-இந்திய அறிவியல் மற்றும் பொறியியல் கல்வி நிறுவனம்
-விஸ்வகர்மா சுயவேலைவாய்ப்புக்கான திறந்தநிலை பல்கலைக்கழகம்
-அத்யாத்மிக் விஸ்வவித்யாலயா (ஆன்மிக பல்கலைக்கழகம்)
உத்தரபிரதேசத்தில் உள்ள போலி பல்கலைக்கழகங்கள்:
-காந்தி ஹிந்தி வித்யாபீடம்
-எலக்ட்ரோ காம்ப்ளக்ஸ் ஹோமியோபதி தேசிய பல்கலைக்கழகம்
-நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பல்கலைக்கழகம் (திறந்த பல்கலைக்கழகம்)
-பாரதிய சிக்ஷா பரிஷத்
கர்நாடகா
-படகன்வி சர்க்கார் உலக திறந்தநிலை பல்கலைக்கழக கல்வி சங்கம்
கேரளா
-செயின்ட் ஜான்ஸ் பல்கலைக்கழகம்
மகாராஷ்டிரா
-ராஜா அரபு பல்கலைக்கழகம், நாக்பூர்
மேற்கு வங்கம்
-இந்திய மாற்று மருத்துவ கல்வி நிறுவனம்
-இன்ஸ்டிடியூட் ஆஃப் ஆல்டர்நேட்டிவ் மெடிசின் அண்ட் ரிசர்ச்
ஒடிசா
-நபாபாரத் ஷிக்ஷா பரிஷத்
-வடக்கு ஒரிசா வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம்
புதுச்சேரி
-ஸ்ரீ போதி அகாடமி ஆஃப் ஹையர் எஜுகேஷன்
ஆந்திரப் பிரதேசம்
-கிறிஸ்து புதிய ஏற்பாடு டீம்டு பல்கலைக்கழகம்