பாகிஸ்தானில் அசுரத்தனமான மழை.. இதுவரை 937 பேர் பலி.. 3 கோடி பேர் பாதிப்பு.. அவசர நிலை அறிவிப்பு!

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் பல்வேறு இடங்களில் தொடர் கனமழை, வெள்ளப்பெருக்கு காரணமாக அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் இதுவரை பாகிஸ்தானில் 343 குழந்தைகள் உள்பட 937 பேர் பலியாகியுள்ளதாகவும், 3 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

பாகிஸ்தானில் தற்போது கடும் பொருளாதார நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. இதை சமாளிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

தொழிற்சாலைகளில் உற்பத்தி பாதிப்பு, இதனால் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பின்மை என பல்வேறு பிரச்சினைகள் இருந்து வருகிறது.

பாகிஸ்தானில் கனமழை

இந்த சூழ்நிலையில், பாகிஸ்தான் நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளம் குடியிருப்பு பகுதிகளுக்கும் புகுந்ததால் ஏராளமான மக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. அதே சமயத்தில் வெள்ளத்தில் சிக்கியும், வீடுகள் இடிந்து விழுந்தும், ஏராளமான அப்பாவி மக்கள் பலியாகி வருகின்றனர்.

 937 பேர் உயிரிழந்துள்ளனர்

937 பேர் உயிரிழந்துள்ளனர்

அந்த வகையில் கடந்த ஜூன் மாதம் 14-ம் தேதியில் இருந்து தற்போது வரை பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு உள்ளிட்ட இடர்பாடுகளில் சிக்கி இதுவரை 937 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும் இதில் 343 பேர் குழந்தைகளும் அடங்குவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக சிந்துவில் மட்டும் 306 பேர் உயிரிழந்துள்ளனர். பலுசிஸ்தானில் 234 உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன. மீட்பு படையினரும் தொடர் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். எனினும் அசுரத்தனமாக பெய்யும் மழைக்கு மத்தியில் மீட்பு பணியில் ஈடுபட முடியாத சூழலும் ஏற்பட்டுள்ளது. மழை நிவாரண நடவடிக்கைகளை கூட செய்யமுடியாத அளவுக்கு மழை கொட்டித்தீர்த்து வருவதாக கூறப்படுகிறது.

 அவசர நிலை அறிவிப்பு

அவசர நிலை அறிவிப்பு

ஒருசில இடங்களில் வெள்ள மீட்பு பணிகளை ஆய்வு செய்யவும் முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கல் கூறுகின்றன. இந்த நிலையில் தொடர் கனமழை காரணமாக பாகிஸ்தானில் தேசிய அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர் கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக ஏற்பட்டுள்ள பெருத்த சேதங்களை கட்டுப்படுத்த இத்தகைய சூழல் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், ”பாகிஸ்தானில் எப்போது 3 முறையே பருவமழை பெய்யும். ஆனால் இந்த முறை 8ஐயும் கடந்து பெய்து வருகிறது” என்று கூறினார்.

 3 கோடி பேர் பாதிப்பு

3 கோடி பேர் பாதிப்பு

மேலும் அவர் கூறுகையில், ”கடந்த 2010-ம் ஆண்டு ஏற்பட்ட அழிவை விட தற்போது மிக அதிகமாக ஏற்படும் நிலைமை உள்ளது. குறிப்பாக இந்த வார தொடக்கத்தில் பெய்த மழை ஒரு பேரழிவை ஏற்படுத்தும் விதமாகவே தெரிகிறது. ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பாலங்கள் அடித்து செல்லப்பட்டுள்ளது. பல வீடுகள் தண்ணீரில் மூழ்கின. பல குடியிருப்புகள் இடிந்து விழுந்துள்ளன. மேலும் நாடு முழுவதும் கிட்டத்தட்ட 3 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்றார்.

 ஏற்கனவே பொருளாதார நெருக்கடி

ஏற்கனவே பொருளாதார நெருக்கடி

பாகிஸ்தானுக்கு உலக நாடுகளும், குறிப்பாக வெளிநாட்டில் வசிக்கும் பாகிஸ்தானியர்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ தாராள நன்கொடை அளிக்க வேண்டும் என்று அந்நாட்டு அரசு கூறி வருகிறது. ஏற்கனவே அரசு பொருளாதார நெருக்கடியில் தவிக்கும் நிலையில், மக்களின் மறுவாழ்வுக்கு கண்டிப்பாக பெரிய அளவில் தொகை தேவைப்படும் என்றும் எனவே நன்கொடை அளிக்க வேண்டும் என்று கூறி வருகிறது.

Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.