லொட்டரியில் பெருந்தொகை கிடைத்ததும் காதலனைக் கழற்றி விட்ட பிரித்தானியப் பெண்…


பிரித்தானிய காதலர்கள் இருவர் சேர்ந்து ஒரே வீட்டில் வாழ்ந்துவந்துள்ளார்கள்.

லொட்டரியில் அந்தப் பெண்ணுக்கு பரிசு விழ, அவர் காதலனைக் கழற்றிவிட்டுவிட்டார்.

நாட்டிங்காம் ஷையரில் வாழும் பொறியாளரான Kirk, 2018ஆம் ஆண்டு, தனது நண்பர் ஒருவர் மூலமாக Laura என்ற பெண்ணை சந்தித்தார்.

விரைவில், Laura, Kirkஇன் வீட்டுக்கு குடிபெயர்ந்தார்.

உங்களுக்கு நான் எவ்வளவு வாடகை தரவேண்டும் என்று கேட்டாராம் Laura, நீ என் காதலி, நீ எனக்குப் பணம் தரத்தேவையில்லை என்று கூறிவிட்டிருக்கிறார் அவர்.

ஆனாலும், நான் நமக்காக வாரம்தோறும் 25 பவுண்டுகளுக்கு லொட்டரி வங்குவேன், பரிசு கிடைத்தால் நாம் ஆடம்பரமாக வாழலாம் என்று கூறியிருக்கிறார் Laura.

லொட்டரியில் பெருந்தொகை கிடைத்ததும் காதலனைக் கழற்றி விட்ட பிரித்தானியப் பெண்... | British Woman Who Dumped Her Boyfriend

Credit: SWNS

சொன்னதுபோலவே Laura வாங்கிய லொட்டரியில் பரிசு விழுந்திருக்கிறது. மாதம்தோறும் 10,000 பவுண்டுகள் வீதம், 30 ஆண்டுகளுக்கு Lauraவுக்கு பரிசுத்தொகை வழங்கப்படும். உத்தேசமாக 3.6 மில்லியன் பவுண்டுகள் கிடைக்கும்.

காதலர்கள் இருவரும் ’ஆவிகளை வேட்டையாடுவதை’ பொழுதுபோக்காகக் கொண்டவர்கள். ஆகவே, பணம் வந்ததும் அதையே தொழிலாகச் செய்யலாம் என Laura கூற, பகலில் பொறியாளர் வேலை பார்த்துவிட்டு Kirk வர, இரவு இருவருமாக ஆவி வேட்டைக்குச் செல்வார்களாம். பின்னர் அதை வீடியோவாக்கி வெளியிடுவதுதான் வேலை.

இப்படியிருக்கும் நிலையில், பணத்தைக் கண்ட Lauraவின் மனம் கொஞ்சம் கொஞ்சமாக மாறத்துவங்கியுள்ளது.

லொட்டரியில் பெருந்தொகை கிடைத்ததும் காதலனைக் கழற்றி விட்ட பிரித்தானியப் பெண்... | British Woman Who Dumped Her Boyfriend

ஆனால், Kirk நீண்ட யோசனைக்குப்பின், Lauraவின் பெற்றோர்களைப் பார்த்துப் பேசி, Lauraவை தான் திருமணம் செய்ய முடிவு செய்திருப்பதாக கூற, அவர்கள் மிகவும் சந்தோஷப்பட்டிருக்கிறார்கள்.

ஒரு திருமண நிகழ்ச்சிக்கு இருவருமாக சென்ற நிலையில், Lauraவிடம் Kirk நாம் திருமணம் செய்துகொள்ளலாமா என்று கேட்க, இல்லை நாம் இனி சேர்ந்துவாழ முடியாது என்று கூறிவிட்டாராம் Laura.

அத்துடன், இருவருமாக வீடு வாங்குவது முதல் பல்வேறு திட்டங்கள் போட்டு வைத்திருந்த நிலையில், 500,000 பவுண்டுகள் மதிப்புடைய அந்த வீட்டுக்குத் தனியாக குடிபோய்விட்டார் Laura.

மேலும், தாங்கள் சேர்ந்து வாழ்ந்தபோது வாங்கிய பல பொருட்களைத் தன்னுடன் கொண்டு சென்றுவிட்டிருக்கிறார் Laura.

மனம் உடைந்துபோன Kirkக்கு ஒரே ஆறுதல், லொட்டரியில் பரிசு கிடைத்ததும் காதலி சொன்னதை நம்பி வேலையை விடாததுதான்.

அவளுக்கு நான் என் வீட்டில் வாடகை கூட வாங்காமல் இடம் கொடுத்தேன், மாதம்தோறும் 1.000 பவுண்டுகளாவது அவள் எனக்குத் தந்தால் போதும், நான் அதை வாங்கிக்கொண்டு பேசாமல் போய்விடுவேன் என்கிறார். ஆனால், Lauraவுக்கு அப்படி ஒரு எண்ணம் இல்லை, அது என் பணம், நான் லொட்டரியில் வென்றது அது என்று கூறிவிட்டார் அவர்.

லொட்டரி நிறுவனமும் அந்த லொட்டரிச்சீட்டு Laura பெயரில் வாங்கப்பட்டது, அது அவருக்குச் சொந்தமானதுதான் என்று கூறிவிட்டதாம்!
 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.