வட கொரியா நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று பரவவில்லை என்றும், சாதாரண ப்ளூ காய்ச்சல் தான் பரவி வருவதாகவும் அந்நாட்டு அரசு தகவல் தெரிவித்து உள்ளது.
கிழக்கு ஆசிய நாடான வட கொரியா கொரோனா வைரஸ் தொற்றை முற்றிலும் ஒழித்து விட்டதாக சமீபத்தில் அறிவித்திருந்தது. இந்நிலையில், இந்த வார தொடக்கத்தில் சீன எல்லையை ஒட்டியுள்ள ரியாங்காங் மகாணத்தின் சில பகுதிகளிள் சிலருக்கு காய்ச்சல் கண்டறியப்பட்டது.
உடனே அதிகாரிகளால் சீன எல்லையை ஒட்டியுள்ள ரியாங்காங் மகாணத்தின் சில பகுதிகளில் கடும் கட்டுப்பாடுகளை விதித்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அங்கு 4 பேருக்கு புதிதாக காய்ச்சல் கண்டறியப்பட்டதை தொடர்ந்து இந்த நடவடிக்க்கை எடுக்கப்பட்டது.
இந்நிலையில், அரசு தரப்பு பரிசோதனை முடிவுகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சாதாரண ‘ப்ளூ’ காய்ச்சல் தான் எனவும் கொரோனா வைரஸ் தொற்று அல்ல என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. வட கொரியாவில் போதிய அளவிலான கொரோனா பரிசோதனை மையங்கள் இல்லாததும் இதற்கு காரணமாக கூறப்படுகிறது.
‘கோ பூஜை’ நடத்திய இந்திய வம்சாவழி பிரிட்டன் பிரதமர் வேட்பாளர்..!- இணையத்தில் வீடியோ வைரல்..!
இதனை அடுத்து ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்பட்டதாக அரசு தெரிவித்துள்ளது. கடந்த மே மாதம் வட கொரியாவில் ஒமைக்ரான் பரவத் தொடங்கி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. வட கொரியாவில் அரசு தரப்பு தெரிவித்துள்ள தகவலின் படி, 4.8 மில்லியன் பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டதாகவும், 74 பேர் உயிரிழந்ததாகவும் கூறப்பட்டு உள்ளது. தென் கொரியாவில் இருந்து பறந்து வரும் பலூன்களால் தான் தங்கள் நாட்டுக்குள் கொரோனா வைரஸ் பரவுவதாக அந்நாட்டு குற்றம் சாட்டியது குறிப்பிடத்தக்கது.