தமிழ்நாட்டில் பிளக்ஸ் பேனர்கள் மற்றும் விளம்பர பதாகைகள் வைப்பதை முழுமையாக தடை செய்யும் விதமாக உரிய விதிகளை வகுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது.
மேலும் அனுமதி இல்லாமல் பேனர்கள் வைப்பதற்கு யாருக்கும் உரிமை இல்லை என்று அதிரடிய காட்டிய சென்னை உயர்நீதிமன்றம் பேனர் வைப்பவர்களீன் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளது.
இந்நிலையில் கடந்த ஆண்டு விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடியை வரவேற்று பேனர் வைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்த 12 வயது சிறுவன் தினேஷ் என்பவர் மின்சாரம் தாக்கி பலியானார்.
ஆடியோ வீடியோவால் வீழ்ந்தது பாஜக; அண்ணாமலையை நீக்க போர்க்கொடி!
இந்த சம்பவத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் பிளக்ஸ் பேனர்கள் வைப்பவர்கள் கண்டறியப்பட்டு அவை உடனுக்குடன் அகற்றப்படுவதோடு குறிப்பிட்ட நபர் யாரென கண்டுபிடிக்கப்பட்டு அபராதமும் வசூலிக்கப்பட்டு வருகிறது.
அதே சமயம் இதுதொடர்பான ஒரு வழக்கில் திமுக தரப்பில் பேனர்கள் வைக்கப்படமாட்டாது என உத்தரவாதம் அளித்து பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது.
அதுமட்டும் இல்லாமல் கடந்த 2019ம் ஆண்டே தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேனர்கள் வைக்கக்கூடிய நிகழ்ச்சியில் கலந்து கொள்ளமாட்டேன் என கூறியதோடு கட்சியினருக்கு கறார் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதன் காரணமாக திமுக நிகழ்ச்சி, கூட்டங்களில் பிளக்ஸ் பேனர்கள் மற்றும் விளம்பர பதாகைகள் வைப்பது ஓரளவுக்கு குறைக்கப்பட்டு வருகிறது. இதில் ஒரு சில இடங்களில் கட்சியினர் பேனர்கள் வைக்கும் கலாச்சாரத்தை கைவிடாத நிலையே நீடிக்கிறது.
தமிழகத்தில் முன்பை போல் இல்லாவிட்டாலும், பெரும்பாலும் பேனர்கள் இல்லாத சூழல் ஓரளவுக்கு திரும்பி இருப்பதையே காண முடிகிறது. இது, முழுக்க முழுக்க திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் மேற்கொண்ட முயற்சிக்கு கிடைத்த வெற்றியாகவே பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் பாணியை கடைபிடிக்கும் விதமாக ஆந்திர பிரதேச முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி பிறப்பித்து உள்ள உத்தரவு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
அதாவது விசாகப்பட்டினம் கடற்கரையை பசுமை கடற்கரையாக மாற்றும் திட்டத்தை ஆந்திரா முதல்வர் ஜெகன் மோகன் இன்று தொடங்கி வைத்தார். இதற்காக நடந்த நிகழ்ச்சியில் இன்று முதல் பிளக்ஸ் பேனர்கள் வைக்க தடை விதிக்கப்படுவதாக ஜெகன் மோகன் அறிவித்தார்.
ஆந்திர முதல்வரின் இந்த அறிவிப்பு பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும், அரசியல்வாதிகளி மத்தியில் அதிருப்தியையும் ஏற்படுத்தி உள்ளது. ஆந்திராவில் தேர்தல் நெருங்கும் நிலையில் முதல்வரின் இந்த உத்தரவு அவருக்கு மேலும் சாதகமான சூழலை உருவாக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.