சர்வதேச சந்தைகள் பலவும் ஏற்றத்தில் முடிவடிந்ததையடுத்து இந்திய சந்தையானது இன்று சற்று ஏற்றத்தில் முடிவடைந்துள்ளது. குறிப்பாக சென்செக்ஸ் 59.15 புள்ளிகள் அதிகரித்து, 58,833.87 புள்ளிகளாகவும், நிஃப்டி 36.45 புள்ளிகள் அதிகரித்து, 17,558.90 புள்ளிகளாகவும் முடிவடைந்துள்ளது.
இதற்கிடையில் இன்று தரகு நிறுவனம் ஒன்று கொச்சின் ஷிப்யார்டு நிறுவனத்தின் பங்கு விலையானது 3 மாதத்தில் இரு இலக்கில் வளர்ச்சி காணலாம் என கணித்துள்ளது.
Cyber Attack: வெறும் 3 மாதத்தில் 18 மில்லியன் சைபர் தாக்குதல்கள்..!
வாங்கி வைக்கலாம்
மினிரத்னா வகையை சேர்ந்த இந்த பங்கினை CMP: 364.45 வாங்கி வைக்கலாம் என்றும், இதன் இலக்கு விலை 405 ரூபாயாகவும் நிர்ணயம் செய்துள்ளது. இதற்காக ஸ்டாப் லாஸ் 324 ரூபாயாகவும் நிர்ணயம் செய்துள்ளது. இந்த பங்கினை ஆவரேஜ் செய்வதற்கான லெவல் 333 ரூபாயாகவும் ஹெச் டி எஃப் சி தரகு நிறுவனம் நிர்ணயம் செய்துள்ளது.
வருவாய்
நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்த நிறுவனத்தின் வருவாய் விகிதம் 31% அதிகரித்து, 440.9 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. குறிப்பாக ஷிப் கட்டமைப்பு துறையில் 47% வளர்ச்சியும், ஷிப் பழுதுபார்க்கும் துறையில் 47% வளர்ச்சியும் கண்டுள்ளது. எபிடா மார்ஜின் விகிதமும் 7.1%மும் வளர்ச்சி கண்டுள்ளது. இதே வரிக்கு பிந்தைய லாபமும் 47.2% அதிகரித்து, 42.2 கோடி ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.
ஷிப் யார்டு நிறுவனம்
இது ஒரு ஸ்மால் கேப் நிறுவனம் ஷிப் கட்டமைப்பு நிறுவனமாகும். இது இந்தியாவில் மிகப்பெரிய ஷிப் கட்டமைப்பு மற்றும் பழுதுபார்க்கும் ஒரு நிறுவனமாகும். இது ஹவுராவிலும் செயல்பட்டு வருகின்றது. இதன் சந்தை மதிப்பு 4793.33 கோடி ரூபாயாகும்.
ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ்
இதே ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ் நிறுவனமும் இப்பங்கினை வாங்க பரிந்துரை செய்துள்ளது. இதனை 355 – 365 ரூபாய் என்ற லெவலில் வாங்கலாம். இதன் இலக்கு விலை 425 ரூபாய் எனவும் பரிந்துரை செய்துள்ளது. இதன் ஸ்டாப் லாஸ் விலை 327 ரூபாயாகவும் நிர்ணயம் செய்துள்ளது. இது தற்போதைய மதிப்பில் இருந்து 16% ஏற்றம் காணலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதன் இலக்கு விலையானது அதன் 52 வார உச்ச விலையையும் தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இன்றைய பங்கு நிலவரம்?
என்.எஸ்.இ-யில் இப்பங்கின் விலையானது 3.79% அதிகரித்து, 364.45 ரூபாயாக வர்த்தகமாகி முடிவடைந்துள்ளது. இதன் உச்ச விலை 368.90 ரூபாயாகும். இன்றைய குறைந்தபட்ச விலை 353.05 ரூபாயாகவும் உள்ளது.
இதே பி.எஸ்.இ-யில் இதன் பங்கு விலையானது 3.80% அதிகரித்து, 364.40 ரூபாயாக வர்த்தகமாகி முடிவடைந்துள்ளது. இதன் இன்றைய உச்ச விலை 368.95 ரூபாயாகும். இன்றைய குறைந்தபட்ச விலை 353.05 ரூபாயாகவும் உள்ளது. இதன் 52 வார உச்ச விலை 383.25 ரூபாயாகவும், இதன் 52 வார குறைந்த விலை 281 ரூபாயாகவும் உள்ளது.
Disclaimer : Greynium Information Technologies, the author are not liable for any losses caused as a result of decisions based on the article. Tamil.Goodreturns.in advises users to check with experts before taking any investment decisions.
This minirathna stock may give profit up to 16%: securities says buy
This minirathna stock may give profit up to 16%: securities says buy/3 மாதத்தில் 16% வரை லாபம் கிடைக்கலாம் .. இந்த மினி ரத்னா பங்கு உங்ககிட்ட இருக்கா?