சென்னை: இன்னாசி பாண்டியன் இயக்கத்தில் நடிகர் அருள்நிதி, ருத்ரா, சோனியா மற்றும் ஷா ரா ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் டைரி.
இந்த படத்தில் நடித்த அனுபவத்தையும், ரொமான்ஸ் சீனில் நடிக்க பட்ட கஷ்டத்தையும் கலகலப்பாக கூறியுள்ளனர்.
இப்படத்தில் நடித்துள்ள ருத்ரா, சோனியா மற்றும் ஷா ரா ஆகியோர் நமது பிலீம்பீட் சேனலுக்கு அளித்த சிறப்பு பேட்டியை இங்கு காணலாம்.
டைரி எழுதினால் பிரச்சனை
கேள்வி: ஷா ரா உங்களுக்கு டைரி எழுதும் பழக்கம் உண்டா?
பதில்: எனக்கு டைரி எழுதும் பழக்கம் கிடையாது. டைரி எழுதினால் மற்றவர்கள் பார்த்து விடுவார்கள். அது பிரச்சனையாகி விடும். அதனால் எனது காதலிக்கு அனுப்பும் லட்டரை கூட பாஸ்வேர்டு போட்டு மெயில் அனுப்பி விடுவேன் என்று ஜாலியாக கூறியுள்ளார்.
ரொம்ப கஷ்டப்பட்டோம்
கேள்வி: ஷாரா, டைரி படத்தில் நீங்கள் நடித்தது குறித்து…
பதில்: டைரி படம் முழுவதும் ஊட்டியில் ஒரு பஸ்சிற்குள் எடுக்கப்பட்ட படமாகும். ருத்ரா, சோனியா மற்றும் சோனியாவின் தங்கையாக நடித்து நடித்துள்ள ஹரிணி புதுமுகங்கள் என்பதால், இவர்களுடன் இணைந்து ஜாலியாக சுற்ற முடிந்தது. சீனியர் ஆர்ஸ்ட்டிகளுடன் நாம் சுத்த முடியாது. இப்படப்பிடிப்பின்போது உதவி இயக்குநர்கள் எங்களைப்படுத்தியதை இப்போது நினைத்தாலும் சிரிப்பாக வருகிறது. பொதுவாக படப்பிடிப்பின்போது, யாருடைய ஷாட் வைக்கிறார்களோ அவர்கள் மட்டும் படப்பிடிப்பு தளத்தில் இருந்தால் போதும், மற்றவர்கள் தேவையில்லை. நடிகர் அருள்நிதி நடிக்கும் காட்சிகள் படமாக்கும்பொழுது, அவர் மட்டும் இருந்தால் போதும். ஆனால் உதவி இயக்குநர்கள் எங்கள் அனைவரையும் பஸ்சிற்குள் ஏற்றி விடுவார்கள். எனக்கு காட்சி கிடையாது. என்னை ஏன் ஏற்றுகிறீர்கள் என்று கேட்பேன். இயக்குநர் சத்தம் போடுவார். அதனால் நீங்களும் ஏறுங்கள் என்று கூறுவார்கள். ஒரு பக்கம் படப்பிடிப்பும், இன்னொரு பக்கமும் எங்களுடைய அரட்டைகள். ரொம்ப ஜாலியாக சென்றது. படப்பிடிப்பு பெரும்பாலும் இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரைக்கும் நடைபெறும். குளிரில் ரொம்ப கஷ்டப்பட்டோம். ஆனால் படத்தை பார்க்கும்போது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. இந்த படம் த்ரில்லர் படம் கிடையாது. குடும்பத்துடன் பார்க்க வேண்டிய பேண்டஸி த்ரில்லர் படமாகும் என்றார்.
ரொமான்ஸின்போது வெட்கம்
கேள்வி: சோனியா நீங்கள் ரொமான்ஸ் காட்சிகளில் நடித்தது குறித்து…
பதில்: ஒரு முத்தக்காட்சியில் நடித்துள்ளேன். ருத்ரா ஹார்ட்டின் வரைவதற்கு அரை நாள் எடுத்துக் கொண்டார். கேமராமேன்அசிஸ்டென்ட் வந்து நாங்க வேண்டுமென்றால் வரைந்து கொடுக்க வா என்று கேட்டனர். இது தொடர்பாக இயக்குநரிடம் இருவரும் திட்டு வாங்கினோம் என்றார்.
இந்த காட்சி குறித்து ஷா ரா கூறுகையில், ருத்ரா ரொமான்ஸ் சீனில் நடிப்பதற்கு ரொம்பவே வெட்கப்பட்டார். கேமராமேனும், இயக்குநரும் மட்டும் இருந்தால் ஒன்றும் தெரியாது. கதை முழுவதும் பஸ்சில் நடப்பதால், அனைவரும் முன்னிலையிலும் ரொமான்ஸ் சீனில் நடிப்பதற்கு கஷ்டப்பட்டார். மற்றபடி இரண்டு பேரும் நன்றாக நடித்திருக்கிறார்கள்.
கடின உழைப்பாளி
கேள்வி: இயக்குநர் இன்னாசி பாண்டியன் குறித்து, ஷா ரா என்ன நினைக்கிறீர்கள்?
பதில்: இயக்குநர் இன்னாசி பாண்டியன் பொறுத்தவரை, என்ன செய்ய போகிறோம் என்பதில் தெளிவாக இருப்பார். அப்படி தெளிவாக இருக்கிறவர்களை பார்ப்பது ரொம்ப கடினம். சில இயக்குநர் படப்பிடிப்பு தளத்திற்கு வந்த பிறகு தான் என்ன ஷாட் வைக்கலாம் என்று யோசிப்பார்கள். இன்னாசி பாண்டியனை பொறுத்தவரை என்ன ஷாட் எடுக்கணும் முடிவு செய்து விட்டு தான் படப்பிடிப்பு தளத்திற்கு வருவார். கடின உழைப்பாளி. அவருடன் பணிபுரிந்து ஒரு நல்ல அனுபவமாக இருந்தது என்றார்.
பீட்சா வாங்கி கொடுத்தார்
கேள்வி: நடிகர் அருள்நிதி குறித்து நீங்கள் கூற விரும்புவது?
பதில்: சோனியா: அவர் படங்களில் வருவது போல் ரொம்ப அமைதியாக இருப்பார் என்று முதலில் நினைத்தேன். படப்பிடிப்பின்போது அவர் ரொம்ப எதார்த்தமாக இருந்தார். சில சமயங்களில் அவர் அடிக்கிற ஜோக்கிற்கு சிரிக்கலாமா? இல்லை கண்டுக்காமல் இருக்கலாமா என்கிற அளவுக்கு ஜோக் இருக்கும். படப்பிடிப்பு முடிந்த பிறகு எங்கள் அனைவருக்கும் பீட்சா வாங்கி கொடுத்தார் தீபாவளியின் போது அனைவருக்கும் பட்டாசும் வாங்கி கொடுத்தார். அவருடைய ஹைட்டுக்கும், வெயிட்டுக்கும் எந்த டிரஸ் போட்டாலும் நன்றாக இருக்கும் என்றார்.
திட்டு வாங்க தயாராகிவிடுவேன்
கேள்வி: ருத்ரா, இந்த படத்தில் உங்களுக்கு பிடித்த வசனம் என்ன?
பதில்: படத்தில் எனக்கு நிறைய வசனங்கள் இருக்கிறது. எந்த வசனத்தை சொன்னாலும், படம் ரிவில் செய்கிற மாதிரி இருக்கும். அதனால் வேண்டாம் என்றார். மேலும் அவர் கூறுகையில், இயக்குநருக்கு யாருக்கு என்னென்ன டயலாக் வைக்க வேண்டும் என்பது அவருக்கு நன்றாக தெரியும். ஷூட்டிங் அவர் கட் சொல்வதை வைத்து நாம் முடிவு செய்து விடலாம். சீன் சரியாக வந்துள்ளதா? வரவில்லையா? என்பதை கூறி விடலாம். திட்டு வாங்குவதற்கு நான் தயாராக இருப்பேன் என்றார்.
வில்லனின் உயரம் 7.2 அடி
கேள்வி: சண்டைக்காட்சியை படமாக்கும்பொழுது நீங்கள் அடைந்த சிரமங்கள் என்ன?
பதில்: ருத்ரா: சண்டைக்காட்சியில் நிறைய அடி வாங்கினேன் என்றார்.
ஷா ரா: கிளைமாக்சில் வரக்கூடிய சண்டைக்காட்சிகள் எல்லாம் பஸ்சில் தான் எடுக்கப்பட்டது. இடம் மிகவும் சிறியதாக இருந்ததால், ஷாட் வைக்கிறதும், கம்போஸ் செய்வதற்கு சிரமப்பட்டோம். இதற்காக பஸ்சை டிஸ்மாண்டில் செய்யவில்லை. நடிகர் அருள்நிதியை பொறுத்தவரை சண்டைக்காட்சிகளில், ஒன்று அல்லது இரண்டு டேக்கில் நடித்து முடித்து விடுவார். சண்டைக்காட்சியில் வில்லனின் உயரம் 7.2 அடி, அருள்நிதியின் உயரம் 6 அடி. இவ்வாறு இருக்கும்போது பஸ்சில் சண்டைக்காட்சி எடுத்தது பெரிய விஷயம் என்றார். இந்த பேட்டியின் முழு வீடியோவை காண பில்மிபீட் தமிழ் யூட்யூப் சேனலிலும் https://youtu.be/0Z9UcZfLsvs இந்த லிங்கை கிளிக் செய்தும் காணலாம்.